வெளிப்படுத்தின விசேஷம் 5 அதிகாரம் #1
Jeffersonville, Indiana, USA
61-0611
1நன்றி சகோதரன் நெவில் அவர்களே, எனது சகோதரனே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக.
காலை வணக்கம், சிநேகிதரே. இக்காலையில் மீண்டும் கூடாரத் தில் வரவும், கர்த்தருடைய வார்த்தையின் பேரில் இவ்வைக் கியத்தைப் பெற்றிருக்கவும், நமது காலை ஆராதனைக்காக இந் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும் முடிந்தது, சிலாக்கியமானது அல்லது மகத்தான சிலாக்கியமானதாகும் என்று நான் நிச்சயம் கூறத்தான் வேண்டும். ஒருசமயம் இவ்வாறு கூறப்பட்டது என்று நான் நம்புகிறேன்; அதாவது 'கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.''- எனக்கு நல்ல விலையேறப் பெற்ற நண்பரான சகோதரன் நெவில் அவர்களோடு மீண்டும் இருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதற்காக.
2அங்கே சற்று குளிர்ச்சியாக அல்லது சற்று உஷ்ணமாக உள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் கைகளினால் இவ்விதமாக உபயோ கித்துக் கொள்ளக்கூடிய சில விசிறிகள் நம்மிடத்தில் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். உங்களிடத்தில் மோட்டார் இருந்தால், விசிறிகள் உண்டு, அதை ஓடச் செய்வதற்காக. இங்கே இன்னமும் அவைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். சிலர் பாட்டுப் புத்தகங்களையும் இன்னும் வேறு சிலவற்றையும் காற்று வீசிக் கொள்ள உபயோகிக்கிறதை நான் காண்கிறேன். எதிர்காலத்தில் உஷ்ணமாயிருக்கப் போகும் இடங்களுக்கு நாம் போய்விடாமல் அவைகளை தவிர்ப்பதற்காகவே, நாம் இங்கே ஆராதனைகளை வைத்துக்கொள்ள முயலுகிறோம். அவ்விடங்களுக்கு நாம் சென்று விடாமல் அவைகளை கடந்து செல்வதற்காகவே நாம் இங்கே கூடி வந்திருக்கிறோம். அதைச் செய்ய சாத்தியமாக்கித் தருவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே.
3சபையானது எவ்வாறு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்றும், கர்த்தரோடு எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்றும், எவ்வாறு தேவன் ஆவிக்குரிய வரங்களினால் உங்களோடு இடைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறதான நல்ல அறிக்கையை நான் கேட்க முடிந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி யுள்ளவனாயிருக்கிறேன். உங்களோடு தேவன் இடைப்படுவதற்கு ஏற்றபடி இருக்கும் உங்களது உத்தம இருதயத்திற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் உங்களை அந்த நேரான குறுகிய பாதையில் வலது இடது புறம் சாயாமல், நடுப் பாதையிலேயே நிலைத்திருக்கும்படி காப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.
4சற்று நேரத்திற்கு முன்னதாக ''பரலோகத்தில் கண்ணீர் இல்லை'' என்ற பாடலை சகோதரன் கால்வினும் அவரது மகளும் பாடினார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அது மிகவும் அழகாக இருந்தது. அதை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன்.
சகோ. நெவிலும் நானும் அநேக ஆண்டுகளாக ஒருவரை யொருவர் அறிந்திருக்கிறோம் என்று சகோ. நெவில் அவர்கள் கூறிய வண்ணமாக, நான் சகோ. கால்வினைக் குறித்தும் கூற முடியும். நாங்கள் ஒருவரையொருவர் அநேக ஆண்டுகளாக அறிந் திருக்கிறோம். அப்பழைய சுவிசேஷப் பாடல்களை அவர் பாடக் கேட்கவும், தனது பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் வளர்த்து வருவதும் எனது இருதயத்தை மிகவும் ஊக்கப்படுத்துவதா யிருக்கிறது. தேவனை நேசிக்கவும், அவருக்காக அக்கறை கொள்ளவுமாக இருக்கிற மக்கள் தேவனுக்கு இன்னமும் இருப்பதை அறிய வருவது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.
5இப்பொழுது நான் இங்கு திரும்பி வந்தது முதற்கொண்டு, அநேகர் விசுவாசத்தின்படி ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் அறிய வந்துள்ளேன். அதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் எனது நல்ல சிநேகிதர் சகோ. எல்மெர் கேப்ஹார்ட் அவர்கள் அங்கே அமர்ந்திருக்கக் காண்கிறேன். விசுவாசத்திற்குள்ளாக அவர் சற்று முன்பு ஞானஸ் நானப்படுத்தப்பட்டார் என்பதைப் பற்றி அறிய வந்தேன். அதற்காக நான் நிச்சயமாக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அக் காரியமானது, கெண்டக்கியிலுள்ள வேட்டைக்குச் செல்லும் எங்களது குழாம், தேவையை மட்டும் வேட்டையாடி எடுத்துக் கொள்வது என்ற நிலைமைக்கு எங்களை இப்பொழுது ஆயத்த மாக்கியுள்ளது, அல்லவா?
எனக்கு நினைவிருக்கிறது; ரோட்னி அவர்கள் பின்னால் உள்ள அறையில் இன்னமும் இருப்பாரெனில், நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிகிறேன்; சார்லி என் முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்; நாங்கள் வேட்டைக்கு சேர்ந்து செல்வது வழக்கம். அவ்வாலிபர்களெல்லாம் நல்லது, அவைகள் அணில்கள்'' என்று விருப்பத்தோடு கூறி கூடுமானால் தேவைக்கு மேலதிகமாக வேட்டையாடி எடுக்க விரும்புவார்கள். ஆனால் அது சரியல்ல என்று கூறி அவர்களோடு பேசுவது வழக்கம். எனவே, இப்பொழுது அந்த குழுவையும் அடுத்த தேசத்திற்கு எடுத்துச் சென்று அங்கே அவர்களை சீர்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். அது நன்றாக இருக்கும்.
6எனவே, நான் சில வேளைகளில், ஒவ்வொரு ஊழியக்காரனும் செய்வது போல், நாம் நடந்து வந்த பாதையை பின்னால் திரும்பிப் பார்த்து, நாம் விதைத்து வந்த வித்தைக் குறித்து என்ன ஆயிற்று என்று பார்க்கிறோம்.
ஜானி ஆப்பிள்சீட் என்பவரைக் குறித்து உங்களில் அநேகருக்கு நல்ல பரிச்சயம் உண்டு . (கி.பி.1775 முதல் 1845 முடிய வாழ்ந்த ஓர் அமெரிக்கர். இவர் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முழுவதும் ஆப்பிள் மரங்களை நட்டவர் - மொழிபெயர்ப்பாளர்). ஏன் ஸ்வீடனில்கூட இதேபோல் காரியத்தைச் செய்த ஒரு மனிதன் இருந்திருக்கிறார். அவர் அத்தேசம் எங்கிலும் மலர் விதைகளை விதைத்தவர் என்று கருதப்படுகிறார். அவர் இப்படிப்பட்ட காரியத் தைச் செய்ததினால்தான் ஸ்வீடன் முழுவதும் இப்பொழுது பலவித மான அழகான மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். விதைகள் வளரத்தக்க நிலம் எங்கேயெல்லாம் இருந்ததோ, அங்கெல்லாம் அவர் அவைகளை விதைத்தார். அவர் மலர்களை மிகவும் நேசித்தார். எனவே அவர் சுற்றிலும் மலர் விதைகளை தூவினார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது மலர்கள் இன்னமும் ஜீவிக்கின்றன. நாம் இறுதி விடை பெறுகையில் காலமெனும் மணற்பரப்பில் கால் தடங்களை பின்னால் விட்டுச்
செல்கிறோம் வாழ்க்கையின் பயபக்திக்குரிய பெரும்பாதையில் பயணம் செய்கையில் அங்கே பதிந்துள்ள கால் தடமானது இன்னொருவருடையதாகும், நம்பிக்கையிழந்த கெட்டுப்போன ஒரு சகோதரன் அதைக் காண்கையில், புத்துயிர் பெற அது உதவுமே.
7அவ்விதமான ஒரு காரியத்தைத்தான் நாமும் காண விரும்பு கிறோம். நாம் செய்திருக்கிற ஒரு காரியமானது மற்றவர்களுக்கு நலம் பயக்கக்கூடியதாக இருப்பதை நாம் காணவேண்டுமென விரும்புகிறோம்.
இந்நகரத்திலுள்ள என்னுடைய உத்தம நண்பராகிய மருத்து வரான சாம் அடேயர் அவர்களோடு சில நாட்களுக்கு முன்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம், “எப்படி யிருக்கிறீர், பில்?'' என்று கேட்டார்.
''நான் மிகவும் நலமாக உள்ளேன், டாக்டர் அவர்களே'' என்றேன். ''நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?'' என்று பரிசோதனை செய்தேன்'' என்றார்.
“ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். நான் இன்று மதியம் பதினைந்து பேர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தேன்'' என்றார்.
நான் மறுமொழியாக, “நல்லது, வெறும் மருத்துவ பரிசோ தனைகளும், அவற்றில் ஏதும் கெடுதல்கள் ஒன்றும் இல்லாமல் இருக்கிற வரையிலும் அது நல்லதுதான்'' என்று நான் கூறினேன். மேலும் நான் நாங்கள் சிறு பையன்களாக இருந்த முற்காலத்தைக் குறித்து பேச்சையெடுத்தோம். நான், ''நல்லது, டாக்டர் அவர்களே, நான் இன்னும் எவ்வளவு காலம் இங்கே இருக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது. நாம் இருவரும் நமது ஐம்பதாவது வயதை எட்டிவிட்டோம்'' என்று கூறினேன்.
“அது உண்மைதான் பில்'' என்றார் அவர்.
“ஆனால் இத்தனை ஆண்டுகளும், சுமார் முப்பத்தொன்று வருட ஊழிய காலம் முழுவதிலும் நான் அவர் வரக்கூடிய அவ் வேளைக்காக எனது இருதயத்தை ஆயத்தமாக்கி வைத்துள்ளேன். எனவே அவர் எப்பொழுது வருவார் என்பதைப் பற்றி பிரச்சினை யில்லை'' என்று கூறினேன்.
அவர், “அது உண்மைதான்'' என்று பதிலளித்தார். ”எனக்கு இருக்கும் மிகப்பெரிய புளகாங்கித உணர்வு எது வென்றால், இத்தனை காலமும் மற்றவர்களுக்காக நான் ஜீவித்துக் கொண்டிருப்பதுதான்'' என்று நான் கூறினேன்.
8''அதுதான் சரியான வாழ்க்கையாயிருக்கிறது, அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. வாழ்க்கையானது நீங்கள் உங்களுக்கென்று என்ன செய்துகொள்ள முடிந்தது அல்லது நிறைவேற்றிக் கொண்டதோ அல்ல, மற்றவர்களுக்காக நீங்கள் என்ன செய்ய இயலக்கூடியதாக உள்ளது என்பதுதான்'' என்றார் அவர்.
ஆகவே, அப்படி வாழ்வதுதான், நீங்கள் உண்மையாக வாழ்கிறீர்கள் என்று இருக்கிறது. நம்மில் யாராவது ஒருபோதும் அவ்விதம் பிறருக்காக வாழ்ந்திராமல் இருப்பது நேரிட்டிருந்தால், பிறருக்காக வாழ முயற்சி செய்யுங்கள். அதற்கு ஒரு முயற்சி செய்யுங்கள்; அப்படி செய்யும் பொழுது, நீங்கள் வாழும் வாழ்க் கையிலிருந்து, உங்களுக்கு என்ன பெற்றுக்கொள்ளலாம் என்பதற் காக, நீங்கள் உங்களுக்காக வாழாமல் யாருக்காவது உங்கள் வாழ்க் கையின் மூலம் பயன்தரத்தக்க அளவுக்கு ஜீவியுங்கள், அதன்மூலம் வாழ்க்கையானது எவ்வளவு இன்னும் அர்த்தமுள்ளதாக இருக் கிறது என்பதை நீங்கள் காணுங்கள். பிறருக்காக வாழ்வதன் மூலம் ஐசுவரியங்களைவிட அல்லது நீங்கள் சிந்திக்கும் எந்தவொன் றையும் விட மேலாக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதை காண்பீர்கள். வாழ்க்கையானது பாரம் மிகுந்ததாயிருக்கிறது.... எனவே நீங்கள் பிறருக்காக ஜீவித்தால் வாழ்க்கையின் பாரம் இலகுவாக்கப்படும். நீங்கள் பிறருக்காக ஜீவிப்பதைச் செய்ய உங்களால் கூடும். பிறருக்காக நீங்கள் ஏதாவது பயனுள்ள காரியத்தைச் செய்தா லொழிய, அதினால் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
9கர்த்தருக்கென்று நான் செய்துவரும் ஊழியத்தில் விரைவில் அது முப்பத்தொன்று ஆண்டுகளை எட்டப்போகிறது, அதைப்பற்றி நான் எண்ணிப் பார்க்கும்படி நேரிடுகிறது. எந்தவொரு மனிதனும் தனது பணியின் கடைசிக் கட்டத்தை எட்டவேண்டியிருக்கும் பொழுது, அவன் தனது இறுதியான மணி நேரத்தை வந்தெட்டுகை யில், அவன் நடந்து வந்த பாதையை பின்னால் திரும்பிப் பார்த்து, வாழ்க்கையில் என்ன செய்து நிறைவேற்றியிருக்கிறோம் என்பதும், என்ன நேரிட்டது என்பதும் தனக்குள், “நீ ஏதாவது சாதித்தாயா?'' என்ற கேள்வி எழும்பும் என்றும் நான் கருதுகிறேன். நான் சற்று முன்பு கூறியவண்ணமாக, மற்றவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்களோ அதுவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
எனது வாழ்க்கைப் பாதையின் முடிவை நான் போய் சேரும் பொழுது, அங்கே என்ன இருக்குமோ என்று நான் அடிக்கடி அறிய விரும்பியதுண்டு. அவ்வேளை எப்பொழுது நேரிடும் என்பதை நாம் அறியோம்; நம்மில் எவரும் அறியோம். ஆகவே, வாழ்க் கையில் இதுவரை நான் நடந்து வந்திருக்கும் கடந்த கால பாதையை திரும்பிப் பார்த்து, அப்பாதையில் நான் வெவ்வேறு குன்றுகளையும், முட்புதர் நிறைந்த பாதைகளையும், பாறைகளையும், கஷ்டமான இடங்களையும், மிருதுவான பயணங்களையும் என் வாழ்வில் கடந்து வந்ததைப் பற்றியும், அவ்விதமான வேளைகளில் நான் என்ன செய்தேன் என்பதையும் பற்றி சிந்தித்துக்கொண்டிருந் தேன். அவையாவும் இந்நாட்களில் ஒன்றில் நான் கடந்து சென்று விடும் வேளையில் தெளிவாகத் தெரியவரும். நம் ஒவ்வொருவரிலும் அவ்வாறுதான் சம்பவிக்கும். ஒவ்வொரு வருக்கும் அவ்வேளை வரும்பொழுது, அது தெளிவாகத்தெரிய வரும் என்பதைப் பற்றி நாம் யாவரும் நிச்சயமுள்ளவர்களாய் இருப்போம்.
10நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றிக் கூறத் தூண்டு கிறதாகவோ, நடத்துகிறதாகவோ இருக்கிறது. ஆனால் அதைக் கூறுவதைவிட ஓடிப் போய்விடலாம் என்று நான் விரும்புகிறேன். ஒரு காரியத்தைக் குறித்துக் கூறும்படி அது என்னை நடத்துகிறது. அதைப்பற்றிக் கூறுவது என் இருதயத்தின் அடித்தளத்தையே நொறுக்குகிறது. ஆனால் நான் என்ன கூறுகிறேனோ, அதைக்கூற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்றும், அதனால் உலகம் அதைக் கேட்கும் என்பதையும் நான் உணர்ந்தேயிருக்கிறேன். ஆனால் நான் ஒரு காரணத்திற்காக ஊழியத்தை விட்டு விலகிட்டேன். நான் அக்காரணத்தினால் ஊழியத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். நான் எனது அலுவலகத்தை மூடுகிறேன் என்பதைப் பற்றியும், ஊழியக்களத்தைவிட்டு விலகு வதைக் குறித்தும் ஒருவேளை உங்களில் அநேகர் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
நமது கர்த்தர் என்னை எங்கே வழி நடத்துவார் என்பதைப் பற்றி எனக்கே தெரியாது. அது என் கட்டுப்பாட்டில் இல்லை; அல்லது நான் செய்ய வேண்டுவதைக் குறித்து அவர் என்ன வெல்லாம் சித்தங்கொண்டிருக்கிறாரோ எனக்குத் தெரியாது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் நான் வந்து சேரவேண்டிய இறுதிக் கட்டத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க் கைப் பாதை நெடுகிலும் நான் அநேக பிழைகளை செய்திருக் கிறேன். அதற்காக நான் என் உளப்பூர்வமாக வருந்துகிறேன். ஒரு நபர் பிழைபட நடக்க விரும்பாமல் இருந்தாலுங்கூட, பிழைபட இருப்பதுவும், மனுஷ பெலவீனமும் அவ்வாறு காரியங்களை செய்யவோ அல்லது பேசவோ ஆக்கிவிடுகிறது என்று நான் கருதுகிறேன். மனுஷீக பெலவீனங்களால் நமக்கு அவ்வாறான வேளைகள் ஏற்பட்டுவிடுகிறது.
11என்னுடைய இருதயத்தில் ஏதாவது ஒரு விருப்பம் இருக்கிற தென்றால், எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில், “நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று நமது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் கேட்க வேண்டு மென்பதுதான். ”என்னிடத்தில் வா'' என்று கூறும்பொழுது, நானும் அங்கே நின்றிருக்க வேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன் என்று நான் அநேக தடவைகள் கூறியிருக்கிறேன். ஆனால் அதைவிட “நன்றாகச் செய்தாய்'' என்று அச்சப்தம் என்னிடம் கூறுவதையே நான் கேட்க விரும்புகிறேன்.
நான் எப்பொழுதும் விரும்பியிருக்கிற காரியம் யாதொன்றும் எனக்கு இருக்குமென்றால், என் இருதயத்தின் வாஞ்சைகள் என்னவெனில், என்னுடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக இருக்க வேண்டுமென்பதேயாகும். என்னுடைய சாட்சி சுத்தமான தாகவும், தெளிவானதாகவும் உடையவனாக நான் நிற்க வேண்டு மென்பதையே நான் விரும்புகிறேன். என்னிடம் எத்தனையோ பிழைகள் இருந்தன; ஆயினும் நான் அவரை என் முழு இருதயத் தோடும் நேசிக்கிறேன்.
நான் ஊழியத்தைவிட்டு விலகுகிறேன் என்று கூறும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளேன். ஏனெனில், ஜனங்கள் மத்தியில் ஒரு காரியம் எழும்பியுள்ளது. அதுவே நான் அவ்வாறு கூறும்படி செய்திருக்கிறது. அதென்னவெனில், நான் ''ஊழியக்காரன்'' அல்லது “ஒரு சகோதரன்'' என்று அழைக்கப்படும் அடைப்புக் குறியிலிருந்து எடுக்கப்பட்டு, ”இயேசு கிறிஸ்து'' என்று அழைக் கப்படுகிறேன். அவ்விதமாக என்னை அழைப்பது எனக்கு அந்தி கிறிஸ்து என்ற பட்டத்தை சூட்டிவிடும். நான் அவரை ஒரு அந்தி கிறிஸ்துவாக சந்தித்து அவரை விட்டு அகற்றப்படுவதற்கு முன்னர், ஊழியத்தைவிட்டு விலகி ஓடிப்போனவனாகவே சந்திக்க விரும்புகிறேன்.
12சில ஆண்டுகளுக்கு முன்பாக அதைப்பற்றி என் காதுகளில் விழுந்தது. நான் அதை ஒரு தமாஷ் என்று எண்ணினேன். ஒரு சமயம் மீன் பிடிக்கச் சென்றிருந்தபொழுது, இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை நான் சந்தித்தேன். அவர்களில் ஒருவரைக்கூட நான் இன்று காலைக் கூட்டத்தில் காணவில்லை. அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக என்னை அணுகி, 'சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீர் அபிஷேகிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்துதானே?“ என்று கேட்டார்கள்.
அவ்விரு சகோதரர்களுடைய கழுத்தையும் கட்டிக்கொண்டு, அவர்கள் எல்லோரிடமும், “சகோதரர்களே, என்னால் முடிந்த அளவு கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனாக இருக்கவே முயன்றிருக்கிறேன். நீங்கள் அவ்விதமான காரியங்களைக் கூறு வதை நான் விரும்பவே மாட்டேன். அவ்வாறு என்னைப்பற்றி எப்பொழுதாவது சொல்லப்படுமென்றால், அப்பொழுது நான் ஒரு தெளிவான மனச்சாட்சியோடு ஊழியக் களத்தைவிட்டு விலகி விடுவேன். அவ்வாறு ஊழியக்களத்தை விட்டு என்னை நீங்கள் போகச்செய்துவிடும் காலத்தில், நான் ஊழியத்தில் இருந்திருந் தால், என்னால் ஆத்தும ஆதாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஆத்துமாக்கள் ஒவ்வொருவருக்கும் நீங்களே பொறுப்பாளிகளாய் இருப்பீர்கள்; என்னை ஊழியக் களத்தை விட்டு விலகிச் செல்லும் படியான நிலைக்கு தள்ளினதற்கும் நீங்கள் பொறுப்பாளிகளா வீர்கள்'' என்று கூறினேன். அத்தோடு அது முடிந்து போய் விடும் என்று நான் எண்ணினேன்.
13அதற்குப்பிறகும், இன்னும் சில தடவைகளிலும் நான் அதே விஷயத்தைப்பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால் அது இவ்வாறில்லை. அன்றொருநாள் கனடா தேசத்தில் ஒரு சகோதரன் என்னிடம் ஒரு சிறிய டிக்கெட்டை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக்காண்பித்தார். அதில் “வில்லியம் பிரன்ஹாம் எங்கள் கர்த்தர்'' என்று எழுதப்பட்டிருந்தது; வில்லியம் பிரன்ஹாமின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் தெரியவந்தது. அது ஒரு சத்துருவாக இருந்திருந்தால், அது என் சத்துருவாக இருந் திருந்தால், நான் அதை ஒரு நகைப்புக்கிடமானதாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் விலையேறப்பெற்ற பிரியமுள்ள சகோதரன் ஒருவர், என்னை இயேசுகிறிஸ்து என்று தான் விசுவாசம் கொண்டுள்ளதாகக் கூறி, என்னிடம் தனது பாவங்களையும் தவறு களையும் அறிக்கைவிட வந்திருந்தார்.
நான் அந்த கோட்பாட்டினை விசுவாசிக்கிறேனா என்று கேள்வி கேட்டு, வீட்டில் எனக்குக் கடிதங்கள் வந்துள்ளன; சிகாகோ மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் தொலைபேசியின் மூலமும் அதைக் குறித்து என்னிடம் கேட்டனர்.
நான் கிறிஸ்து என்று கூறுகிறதான எல்லாவிதமான கடிதங்களும், தொலைபேசி அழைப்பு மூலம் கூறுவதும் கடந்த சில நாட்களில் எனக்கு வந்துள்ளன. சகோதரரே, அது பிசாசினு டைய பயங்கரமான, வெட்கக்கேடான, தேவபக்தியற்ற ஒரு பொய்யாகும். பார்த்தீர்களா? நான் உங்களுடைய சகோதரன் என்பதை உணருங்கள். அவ்விதமாகக் கூறுவது, கிறிஸ்துவை நேசிக்கிற எந்த ஒருவனையும் ஊழியத்தைவிட்டு ஓடிப்போகச் செய்துவிடும்.
14ஒரு வருடத்திற்கு முன்பாக நான் முதன்முறையாக இதைக் குறித்துக் கேள்விப்பட்டபொழுது, சமீபத்தில் நான் ஆண்டவரிடம் சென்று கேட்டேன். நான் ஆண்டவரை அணுகியபொழுது, அவர் எனக்கு வேத வாக்கியங்களைச் சுட்டிக்காட்டி, அநேக ஆண்டுகால மாக யூதர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் வராதிருந்தபொழுது, அவர்களுக்கு யோவான் பிரசங்கித்துக்கொண்டு வந்தபொழுது, அவனைக் குறித்து அவர்கள் தங்கள் இருதயத்தில் ஆச்சரியப்பட்டு; யோவான் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும் என்று தங்கள் மனதில் எண்ணியதைக் குறித்த விஷயத்தைக் குறிப்பிட்டார். எனவே அப்பொழுது நான் .... அவர்கள் யோவானிடம் போய் அவன் கிறிஸ்துதானா என்று கேட்டபொழுது, அவன் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான். அதை நீங்கள் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்தில் காணலாம். ஆகவே, அதன்பிறகு அது ஓய்ந்துவிட்டது. ஆகவே நானும் அதை அப்படியே விட்டு விட்டேன்.
ஆனால் அது இந்த அளவுக்கு நீடித்துக்கொண்டே இருக்கும் போது, அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று நான் அப்பொழுது அறிந்துகொண்டேன். சபைக்கும் உலகுக்கும் இதுவே எனது கடைசி செய்தியாக இருக்குமானால், எனக்கு ஏற்பட்ட தரிசனமும், நதிக்கரையில் கர்த்தருடைய தூதன் தோன்றி கூறியவைகள் யாவும் சத்தியமாயிருக்கின்றன.
அநேக சமயங்களில் மக்கள் என்னை தீர்க்கதரிசி என்று அழைக்கும் போது, அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில், ஆங்கில மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாட்டில், ''தீர்க்கதரிசி'' என்றால் ஒரு பிரசங்கி'' என்றும், “தீர்க்கதரிசனம் உரைப்பவன்'' என்றும், ''வார்த்தையை முன்னுரைப்பவன்'' என்றும் பொருள்படும். அப்படி அழைத்தபொழுது நான் ஓடிப் போய்விடவில்லை. ஏனெனில் அதையெல்லாம் நாம் சகித்துக் கொள்ளலாம். ஆனால் 'அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து'' என்று அழைக்கப்படும் நிலைக்கு வரும்பொழுது, அது என்னால் தாங்கிக்கொள்ள முடியாத காரியமாக இருக்கிறது. எனவே என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
15கனடா தேசத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, புறப்பட்டுச் செல்லும் போது, அங்கிருந்து தொலைதூரத்தில் வசிக்கும் எஸ்கிமோக்கள் அல்லது இந்தியர்கள் மத்தியிலும் அவ்விஷயம் பரவியிருக்கக் கண்டேன்.
ஆகவே அது என்னை முழுவதுமாக மனமுறிவடையச் செய்துவிட்டது. வேட்டைக்குச் செல்ல நீண்ட காலமாகவே நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மேற்கொள்ள இயலாமற்போயிற்று. ஏனெனில் நான் வேட்டைகால விபத்து ஒன்று நேரிட்டு விடுமோ என்று அஞ்சினேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், இது உங்களுக்குப் புரியும். நான் இப்பொழுது இங்கே நடுக்கத்தோடு நின்றுகொண்டிருப்பதைவிட மிகவும் நடுக்கமுள்ளவனாக அப்பொழுது இருந்தேன். முப்பத்தொன்று ஆண்டுக்கால ஊழிய மானது பிசாசின் சாக்கடைக் குழாயில் ஆழத்தில் விழுந்து விட்டதே என்பதை எண்ணுகையில், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் போய்விட்ட பின்பு, அவர்கள் என்னைப் பற்றிக் கூறியது யாவும் முற்றிலும் சரியாகிவிட்டது என்பார்கள். ஜனங்கள் மேல் எனக்கு இருந்த செல்வாக்கெல்லாம் போய், அது ஒரு அந்திக்கிறிஸ்துவின் காரியம் என்பதாக ஆகிவிடும். ஆகவே என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நான் இந்தக் காட்டிலேதானே என் துப்பாக்கியின் மீதோ அல்லது வேறெதின் மீதோ விழுந்து இறந்துவிடுவதே நல்லது என்று எண்ணினேன். பிறகு நான் வளர்த்து ஆளாக்கப்பட வேண்டிய என்னுடைய சிறிய மகன் ஜோசப்பைக் குறித்து எண்ணிப்பார்த்தேன். அதற்குமேல் நான் வேட்டையாடும் நிலை யில் இல்லை; எனவே நான் காட்டைவிட்டுப் புறப்பட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
எட்டு அல்லது பத்து நாட்களுக்கு நான் மனமுறிவடைந் தவனாக குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். நான் சிந்தை தடுமாறுகிறேனோ என்று எண்ணினேன். நான் ஒவ்வொரு வரிடமும், என்னைவிட்டு நீங்கியிருக்கும்படியாகவும், என்னைத் தனியே விட்டு விடும்படியும் கூறினேன். ஏனெனில் நான் தடுமாற்றமான சூழ்நிலையில், பதற்றமுள்ளவனாக, நிலைகுலைந்து, சுக்குநூறாக இதயம் கிழிந்த நிலையில் இருந்தேன்.
16இதையெல்லாம் கூறுவது என்னுடைய சத்துருவாயிருந்தால் அதைப்பற்றி பரவாயில்லை; நான் அதைப்பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதைக்குறித்து நகைத்து என் வேலையை செய்து கொண்டே இருந்திருப்பேன். ஆனால், இதையெல்லாம் கூறுவது விலையேறப்பெற்ற சகோதரனோ, விலையேறப்பெற்ற சகோதரி யாகவோ இருக்கும் போது, அதுவே என்னை புண்படுத்துகிறது. “கர்த்தாவே, இவ்விஷயம் என்னால் தாங்கவொண்ணாத காரிய மாகும். நான் இதை உம்முடைய கரத்தில் கொடுத்துவிட்டு, ஊழியத்தைவிட்டு வெளியேறி விடுவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை'' என்று கூறினேன்.
சில நாட்களுக்கு முன் ஓர் இரவில், கர்த்தரிடத்திலிருந்து இதைப்பற்றி நிச்சயமாய் அறிந்துகொள்வதற்கான ஒரு தரிசனம் உண்டாயிற்று. கருப்பும் மஞ்சள் நிறமுமான அழகான குட்டி சர்ப்பம் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே என் காலில் கடித்தது. ஆனால் எனது இரத்தம் உயர்தரமானதாக இருந்த படியால், அதின் விஷம் எனக்கு சேதம் ஒன்றும் விளைவிக்கவில்லை. நான் குனிந்து சர்ப்பம் கடித்த இடத்தைப் பார்த்தேன். நான் விரைவாக திரும்பி துப்பாக்கியை எடுத்து அந்த சர்ப்பத்தை சுட்டேன். அதனுடைய உடலின் நடுப்பாகத்தில் அதற்கு காயம் பட்ட து.
ஒரு சகோதரன் கூறினார். நான் என்னுடைய துப்பாக்கியினால் அதன் தலையைச் சுட்டுவிடத் திரும்பினபோது, ஒரு சகோதரன் கூறினார், “அப்படிச் செய்யாதீர்கள், உங்கள் பக்கத்தில் கிடக்கும் அந்த கம்பை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார். அந்தக் கம்பை எடுக்கத் திரும்பியபோது, அது தடுமாறிக்கொண்டே வளைந்து வளைந்து ஒரு சிறு நீர் நிறைந்த குட்டையினுள் போய்விட்டது.
''நல்லது, அது இனிமேல் அதிகம் சேதத்தை விளைவிக்க முடியாது; ஏனெனில் அந்த சகோதரர் (அந்த சகோதரர்கள் ) உணர்வடைகிறதாக காரியம் நடக்கும் என்று நான் விசுவாசிக் கிறேன். அந்த சர்ப்பம் அழிவுக்கேதுவாகக் காயப்பட்டிருக்கிறது. எனவே அது செத்துவிடும்'' என்று நான் கூறினேன்.
17சகோதரன். நெவிலையும் என்னையும் கொண்டுள்ள எனது சபையின் அங்கத்தினர்கள் அநேகரை, இந்தக் கேள்வியோடு இங்கு வந்து என்னை அணுகுகிறவர்களை, நான் கேட்கிறேன். சகோதர சகோதரிகளே, நான் உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவுக்கு உண்மையாக ஊழியக்காரனாக நடந்து கொள்ளும்படி முயற்சி செய்ததில்லையா? நான் உங்களுடைய சகோதரனாக இருக்க முயற்சி செய்ததில்லையா?
எங்கெல்லாம் இப்போதகம் இருக்கிறதோ, அங்கே அதுதானே விலையேறப்பெற்ற மக்கள் மேல் இருக்கும் ஒரு ஆவியாக இருக்கிறது. அநேகர் இதைப்பற்றி என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அது ஒரு ஆவியாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அப்போதகம் சாவுக்கேதுவான காயத்தைப் பெற்றுக்கொள்கிறது. அது விரைவில் மரித்துவிடும்; எனவே நான் ஊழியத்திற்கு திரும்பி வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன். அதுவரையிலும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபிக்கும்படி நான் கேட்டுக் கொள்வேன். நான் என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியாது. எனது வீடு விற்பனைக்கு உள்ளது. என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் இங்கு தங்கியிருப்பேனென்றால், எனக்கு முழுவதுமாக பைத்தியமே பிடித்து விடும். எனக்காக ஜெபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களாயின், இது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்; நீங்கள் என்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களாயின், அப்பொழுது ஒரு காரியம் உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்; அதென்னவெனில், 'அப் போதகம் சத்தியத்திற்கு விரோதமான நெறி பிறண்டதாக இருக் கிறது. அது பொய்யானதாக இருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதென்ன வென்றால் அது முறைகேடானதாக இருக்ககிறது; அப்படிப்பட்ட தோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள். நான் உங்களுடைய சகோதரன்.
நாம் தலைகளை வணங்குவோமாக.
18பரலோகப் பிதாவே, என் மாம்சமானது நடுங்குகிறது; என் கைகள் பிசைகின்றன; எனது பாதவிரல்கள் என் காலணிகளுக்குள் இழுக்கப்படுகின்றன. ஓ தேவனே, இரக்கமாயிரும்; இது எனக்கு நேரிட நான் என்ன செய்தேன்? நீர் என்னிடத்திலும் யாவரிடத் திலும் இரக்கமாயிருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அந்த விலையேறப்பெற்ற மக்கள், தாங்கள் செய்திருக்கிற நெறிபிறண்ட அச்செயலைக் குறித்து, தங்களுக்குள் உணர்வடையட்டும். கர்த்தாவே, அவர்களது இச்செயல் தங்கள் சகோதரனின் இருத யத்தையும், தங்கள் சகோதரனை மாத்திரமல்ல, நமது இரட்சகராகிய நமது பரம பிதாவின் உள்ளத்தையும் உடைத்ததே. நீர் எங்கள் பிழைகளை எங்களுக்கு மன்னித்தருளும். கர்த்தாவே. கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எங்கள் ஜீவன்களை ஒன்று சேர்க்கட்டும். கர்த்தாவே, எங்கள் இருதயங்களை கிறிஸ்தவ அன்பிலும், ஐக்கியத் திலும் இணைக்கிற அந்த அன்பின் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக.
தேவனே, சத்துருவானவன் அக்கள்ளப் போதகத்தை எடுத்துக் கொண்டு, எங்களது சகோதர சகோதரிகளையும் அணுகியிருக் கிறானே, அவன் இனிமேலும் நிலைத்திருக்காதபடி சாவுக்கேது வான காயத்தைப் பெற்றுக்கொள்ளட்டும். அது அப்படியே மரித்துப் போகட்டும், கர்த்தாவே, பிதாவே, நீர் அதைச் செய்யும்பொழுது, நான் ஊழியக் களத்திற்கு மீண்டும் திரும்பி வருவேன். ஆனால் அதுவரைக்கிலும், கர்த்தாவே, இருதயம் நொறுங்கின நிலையில் உள்ள உம்முடைய ஊழியக்காரனாக நான் காத்துக்கொண்டிருப்பேன். என்னால் எதுவும் செய்யக்கூடியதான நிலையையும் அது தாண்டிப்போய்விட்டது. அதைத் தடுப்பதற்கு என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையை அது தாண்டிப் போவதற்கு முன் அதை நிறுத்துவதற்காக நான் கண்ணீரோடும், கதறுதலோடும் புத்தி சொல்லி இணங்க வைக்க நான் மிகவும் கடினமாக முயற்சி செய்தேன்; நீர் என் இருதயத்தை அறிவீர், கர்த்தாவே. ஆனால் அது வரம்பு மீறிப் போய்விட்டது. என்னால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிட்டது. எனவே, பிதாவே, அதை நான் உம்முடைய கரத்தில், அநேக ஆண்டுகளாக நான் பிரசங்கித்து வந்த இந்த பிரசங்க பீடத்திலிருந்து ஒப்புக்கொடுக்கிறேன். அதை உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன்.
இப்பொழுதும் பிதாவே, நீர் உம்முடைய சொந்த தெய்வீக வழியில் கவனித்துக்கொள்ளும். அது முற்றிலும் ஒழிந்து போன பிறகு, ஓய்ந்து போனபிறகு, அப்பொழுது உம்முடைய ஊழியக் காரன் ஆகிய நான் ஊழியத்திற்கு திரும்புவேன். அதுவரைக்கிலும் நீர் பேசுவதைக் கேட்கும்படி காத்திருப்பேன், கர்த்தாவே.
இப்பொழுது எங்களை ஆசீர்வதித்து எங்களுக்கு இன்றைக்கு மகத்தான ஆராதனையைத் தந்தருளும். ஏனெனில் நாங்கள் இதற்காக மாத்திரம் இங்கு கூடிவந்திருக்காமல், அதை உலகுக்கு முன்பாக பகிரங்கமாக தெளிவுபடுத்தவும் கூடிவந்திருக்கிறோம். அதனால் அவர்கள், நான் உம்மை நேசித்து விசுவாசித்து உமக்காக நின்றேன், இன்னமும் நிற்க விரும்புகிறேன் என்பதை அறிந்து கொள்வார்களாக. அடியேன் போய்விட வேண்டுமென்றால் நான் உம்மை விசுவாசித்து உம்மில் நம்பிக்கை கொண்டிருந்ததைப் பற்றிய உண்மையான சாட்சியோடும், சுத்த இருதயத்தோடும் நான் போய்விடட்டும், கர்த்தாவே. அதை அளித்தருளும்; வரப்போகும் காலங்கள் நெடுகிலும் நான் உம்மைத் துதிப்பேன்; நாங்கள் உமக்கு மகிமை செலுத்துவோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக, ஆமென்.
19இப்பொழுது நாம் வேதாகமத்தில் .... வேத வசனங்களுக்குத் திரும்புவோம். சகோதரன் நெவில் அவர்கள் பொருட்படுத்த வில்லையெனில், இன்னும் சில நிமிட நேரம் தொடர்ந்திடலாம் என்று நான் இன்று காலையில் எண்ணினேன்.
உங்களில் இனி ஒரு தடவைகூட எவருக்குள்ளும் இக்காரியம் பேசப்பட்டு அது என் காதில் வந்து விழவேண்டாம். ஜெபித்து, அதைத் தள்ளிவிட்டு, அதைப்பற்றி பேசாதிருங்கள். நான் ஐம்பத்திரண்டு வயதுடையவனாய் இருக்கிறேன். ஆனால் ஒருவேளை தேவன் என்னை உயிரோடு இன்னும் வைத்திருப்பா ரெனில், இன்னும் கொஞ்ச காலம் மாத்திரமே என் ஜீவன் இருக்கும். நான் என்னுடைய நேரத்தின் ஒவ்வொரு துளியையும் கிறிஸ்துவுக்கென்றே செலவழிக்க விரும்புகிறேன். ஆகவே, நான் ஊழியத்தை விட்டு விலகிச் செல்கிறேன். ஏனெனில் நான் அவ்வாறு செய்யும்படியான கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக் கிறேன். இது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.
20இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் அன்றைய தினத்தில் நான்காம் அதிகாரத்தோடு நிறுத்தியிருந் தோம். வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் நான்காம் அதிகாரம், அவ்வதிகாரத்தின் கடைசிப் பாகத்தோடு நிறுத்தியிருந்தோம் என்று நான் நம்புகிறேன். நல்லது, எத்தனை பேர் வெளிப்படுத்தின விசேஷத்தை விரும்புகிறீர்கள்? அற்புதம் நாம் 5-ம் அதிகாரத்தில் நிறுத்தியிருந்தோம் என்று நான் எண்ணுகிறேன். அப்படித்தானே? நாம் நான்காம் அதிகாரத்தில் ஜீவன்களைப் பற்றிய விஷயத்தோடு நிறுத்தியிருந்தோம். இப்பொழுது, நாம் கடந்த காலத்தின் விஷயங்களை மறந்துவிட்டு, திருவசனத்தை அணுகுவோமாக.
21பிதாவாகிய தேவனே, நாங்கள் பதற்றமுடையவர்களாக இருப்பதினால் நீர் எங்களுக்கு உதவி செய்தருளும். ஆனால் நாங்கள் திருவசனத்தை அணுகும் பொழுது, பின்னானவைகளை மறந்து, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக முன்னானவைகளை நாடுகிறோம். அப்பரம அழைப்பானது கிறிஸ்துவுக்கு ஊழியக் காரனாக இருப்பதற்குரிய ஊழியமாயிருக்கிறது. கர்த்தாவே, பரிசுத்த ஆவியின் விலையேறப்பெற்ற அபிஷேகத்தைப் பெற நாங்கள் வாஞ்சித்தும், அதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். எனவே இன்று காலையில் எங்களுக்கு வார்த்தையை அளித்து, பசியுள்ள எங்கள் ஆத்துமாக்களை, மீறுதல்களையும் மன்னித்து, எங்களை உம்முடைய ஊழியக்காரராக போஷித்தருளும். கர்த்தாவே, நீர் எங்கள் மத்தியில் வந்து, எங்கள் பாவங்களையும் மீறுதல்களையும் மன்னித்து எங்களை உம்முடைய ஊழியக்காரராக இருக்கச் செய்தருளும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென்.
22நாங்கள் சபைக்காலங்களைக் குறித்துப் படித்தோம். கடைசி யான ஏழு சபைக் காலங்களைக் குறித்துப் படித்தோம். அதன்பிறகு, இப்பொழுது, இங்கே சிலர்..... இச்சபைக்காலங்களைக் குறித்து புத்தகம் ஒன்றை எழுதப்போகிறார்கள். அதன்பிறகு, நாங்கள் வெளிப்படுத்துதலின் புத்தகத்தின் நான்காம் அதிகாரத்திற்கு வருகிறோம். இது என்ன புத்தகம்? இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்படுத்துதல் ஆகும். வெளிப்படுத்துதல் என்பது லத்தீன் மொழியில் அப்போகேலிப்ஸ்'' (Apocalypse) என்று வழங்கப் படுகிறது; அதன் அர்த்தம் என்ன வெனில், “மூடியிருக்கிற மூடலை அகற்றி வெளிப்படுத்துவது, காண்பிப்பது, வெளியே தெரியப் படுத்துவது'' என்பதாகும். இருந்தவரும் இருக்கிறவரும், வரப் போகிறவரும், தாவீதின் வேரும் சந்ததியுமாகிய இயேசுகிறிஸ்து வைப் பற்றிய வெளிப்படுத்துதலை வெளிக்கொணர்வதாகும்.
23இப்பொழுது இந்நான்காம் அதிகாரத்தில் யோவானானவன், சபைக்காலங்களை அவன் கண்ட பிறகு, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறான் என்று நாம் கண்டோம். சிறிது இதன் பின்னணியைப் பார்த்துவிட்டு பிறகு நாம்...
5ம் அதிகாரத்தின் சில வசனங்களை நாம் வாசித்துவிட்டு, பிறகு, இதன் பின்னணிச் சூழலைப் பற்றி பார்க்கத் துவங்குவோம்.
“அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன்.
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்.
வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடா திருந்தது.
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழ வேண்டாம்; இதோ, யூதோ கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரை களையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது. அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.“
வெளி. 5:1-7. இவைகள் முதல் ஏழு வசனங்களாகும்.
24வெளிப்படுத்தின விசேஷத்தின் மூன்றாம் அதிகாரத்தில், சபைக்காலங்கள் முடிவடைகிறதை நாம் காண்கிறோம். அது வெதுவெதுப்பான சபைக்காலமாகிய லவோதிக்கேயா சபைக் காலத்தோடு முடிவடைகிறது. அதன்பிறகு, உடனடியாக யோவான் ஆவிக்குள்ளாக பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறதை நாம் காண்கிறோம். அவன் இருந்தவைகளையும் இருக்கிறவைகளையும் வரப்போகிறவைகளையும் பார்த்தான். வெளிப்படுத்தின விசேஷத்தின் மூன்றாம் அதிகாரத்திற்குப் பிறகு 19-ம் அதிகாரம் வரைக்கிலும் சபையை நாம் காண்பதில்லை. அதன்பிறகு அவள் தன் கர்த்தரோடு, இரத்தத்தில் மகிமையாக கழுவப்பட்டவளாய், திரும்பி வருகிறாள்.
25இப்பொழுது யோவான் எங்கிருக்கிறான் என்பதைக் குறித்து, பேசப்பட்ட கடைசி செய்தியிலிருந்து பின்னணியை நாம் கவனிப் போம். நான் அதைக்குறித்து பிரசங்கித்தவைகளின் விஷயங்களை நேற்றைய தினத்தில் பரிசீலித்துக் கொண்டிருந்தேன். யோவான் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அக்காரியங்களைக் கண்டான். அவர் எனக்கு ஒரு வெளிப்படுத்துதலை அதன்பேரில் கொடுத்திருந்திருக்கிறார் என்பதை நான் அங்கே கவனித்தேன். அது.... ஆண்டவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அநேகர் அவரோடிருந்தனர். சிலர் அவரிடம், “உமது மார்பில், சாய்ந்து கொண்டு இருக்கும் இம்மனிதனுக்கு (யோவானுக்கு) என்ன நேரிடும்?'' என்று கேட்டனர்.
அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்று கூறினார். எனவே அவர் ஒருபோதும்....
அப்பொழுது, அங்கே ஒரு போதகம் புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு ஒரு போதகம் புறப்படுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். இயேசு வருவதைக் காணுகிற வரையிலும், அல்லது இரண்டாம் வருகை வரையிலும், யோவான் மரிப்பதில்லை'' என்ற போதகம் அப்பொழுது அதிலிருந்து புறப்பட்டது. அதிலிருந்து ஒரு போதகம் புறப்பட்டது என்று வேதம் கூறுகிறது.
ஆனாலும் இயேசு அந்தவிதமாகக் கூறவேயில்லை. ''நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்றுதான் கூறினார்.
அவன் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அப்பொழுதிலிருந்து கர்த்தருடைய வருகை பரியந்தமும் நடப் பவைகளை அவன் கண்டான். அவன் எதிர்காலத்தில் உள்ளவைகளை காண்கையில், அக்காலத்தில் ஜீவித்திருந்தவனைப்போல் இருந்து, அவைகள் சம்பவிக்கக் கண்டான். யோவான் நீண்ட காலம் உயிரோடிருக்கவில்லை.... அவன் தொண்ணூறும் சொச்சம் ஆண்டு கள் மட்டும் உயிர் வாழ்ந்து, பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டதி லிருந்து திரும்பி வந்து, இயற்கையான மரணத்தை எய்தினான். அவ்வாறு மரித்த ஒரே அப்போஸ்தலன் இவன்தான்.
26இப்பொழுது இதில் மிகவும் மேம்பட்ட ஒரு விஷயம் உள்ளது. (அவர்கள் எனது கரும்பலகையை எடுத்து கீழே வைத்து விட்டார்கள் என்று கருதுகிறேன்). இந்த மிக முக்கியமான விஷயத்தை நாம் பார்ப்பதற்கு முன்பாக நான் அந்த விஷயத்தின் பேரில் வலியுறுத்தி ஒன்றைக் கூறவிரும்புகிறேன். ஓ, இது மகிமை பொருந்தினதாக இருக்கிறது. அது அற்புதுமானது, அற்புதமான அதிகாரம்.
இதற்குப்பிறகு, அடுத்துள்ள அதிகாரமானது முத்திரைகள் திறக்கப்படுதலோடு ஆரம்பிக்கிறது. ஓ, என்னே ! அதன்பிறகு, நாம் இம்முத்திரைகள் எப்பொழுது திறக்கப்பட்டன, அவைகளிலுள்ள இரகசியங்கள்தான் என்ன என்பதைப் பற்றி பார்க்க, வேதாக மத்தில் பல்வேறு பகுதிகளை நாம் பார்க்க வேண்டும். ஓ, அவைகள் மகிமை பொருந்தினவைகளும், வளமையானதாகவும் இருக் கிறது, அவைகளில் ஆவிக்குரிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
27நான்காம் அதிகாரத்தின் இறுதிப் பாகத்தில் காணப்படும் அந்த ஜீவன்களைப் பற்றிய மிகவும் தலைசிறந்த விஷயத்தைக் குறித்து உள்ள விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பு கிறேன். யோவான் இவைகள் உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் பண்ணுகிறதைப் பார்த்தான். இஸ்ரவேலர் தங்களுடைய யாத்திரையின் போது எவ்வாறு பாளயமிறங்கினார்களோ, அதே விதமாக இவைகள் வைக்கப்பட்டிருந்தன என்பதைப்பற்றி நாம் பார்த்ததை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். இந்த ஜீவன்கள் தூதர்கள் அல்ல என்பதாக நாம் கண்டோம். அவைகள் மனிதனும் அல்ல என்றும் கண்டோம். அவைகள் கேருபீன்கள் ஆகும். பழைய ஏற்பாட்டில் அவைகள் உடன்படிக்கைப் பெட்டியோடு இருப்பதாகக் கண்டோம். அவைகளை நாம் புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். அவைகளை மீண்டும் கர்த்தருடைய வருகையின் போதும் இருக்கக்காண்கிறோம். கேருபீன்கள் கிருபாசனத்தைக் காவல் செய்துகொண்டிருக்கின்றன.
எந்தவொரு நபரும் தனக்கென பாவப்பிராயச்சித்தம் ஒன்று இல்லாமல் கிருபாசனத்தை கிட்டிச் சேரமுடியாது. ஒரே வழி அப்பரிசுத்த ஸ்தலத்திற்கு... அங்கே இரத்தம் தெளிக்கப்பட்ட பொழுதுதான், அது கிருபாசனமாக ஆகிறது. ஆனால் இரத்தமானது அதிலிருந்து எடுபட்டுப்போனபிறகு, அது நியாயத்தீர்ப்பு ஆசனமாக ஆகிவிடுகிறது.
28ஓ, ஒருவராலும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிற்கமுடியாது. நாம் எதிர்நோக்கக்கூடிய ஒரே காரியம் என்ன வெனில், நியாயத்தீர்ப்பு அல்ல, இரக்கமேயாகும். நீதியையல்ல. அவரது நியாயத்தீர்ப்பை நாம் நெருங்க முடியாது. ஏனெனில், அவரது நியாயத்தின்படி, அவர் தனது வார்த்தையை காத்துக் கொண்டாக வேண்டும். 'நீ புசிக்கிற நாளிலே சாகவே சாவாய்'' என்று அவர் கூறின தமது வார்த்தையை காத்துக்கொண்டாரே. யாருக்கு நியாயத்தீர்ப்பு வேண்டும்? எனக்கு நியாயத்தீர்ப்பு வேண்டாம். நான் இரக்கத்திற்காகவே கூப்பிடுகிறேன். ஓ தேவனுடைய இரக்கமானது... கிருபாசனமானது தெளிக்கப் பட்டுள்ளது.
ஆனால் பரிசுத்த ஸ்தலத்தை சுத்தம் செய்தல் நடக்கிற வேளை ஒன்று இருக்கிறது. அப்பொழுது அவ்வசனத்தில் இரத்தம் இல்லா திருக்கிறதினால், அது நியாயத்தீர்ப்பு ஆசனமாக ஆகிவிடுகிறது.
இப்பொழுது, நாம் அந்த வேளையை நெருங்கிக்கொண்டிருக் கிறோம். இந்தக் காலத்தில், பரிசுத்த ஸ்தலமானது கழுவி சுத்தி கரிக்கப்பட்டு பூமியின் மேல் நியாயத்தீர்ப்பானது வரப்போகும் ஒரு வேளையை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? இரத்தமானது அங்கே இருக்கிறவரையிலும், தேவனால் பூமியை அழிக்க முடியாது. இரத்தமானது அங்கே இருக்கிறவரையிலும், தேவனுக்கு முன்பாக ஒருவரும் பாவியல்ல. யாவரும் சரியாக இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்காகவும் பாவப் பிரயாச்சித்தமானது அங்கே இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களுக்காக உள்ள பாவப்பிராயச்சித்தத்தை ஏற்றுக்கொண்டு அவருடைய சமுகத்திற்குள் போகாவிடில், அப்பொழுது நீங்கள் பாவியாக இருக்கிறீர்கள். நீங்கள் இரக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்களே உங்களை நியாயந்தீர்த்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால் இப்பொழுது இரக்க மானது அங்கே இருக்கிறபொழுது... ஆனால் பரிசுத்த ஸ்தலத்தை கழுவி சுத்திகரிக்கும்; வேளையானது வருகிறபோது கிருபாசனத்தை விட்டு இரத்தமானது நீங்கிப்போகிறது. அப்பொழுது தேவ னுடைய கோபமானது பூமியின்மேல் விழுகிறது. ஓ, என்னே! தேவனே, நாங்கள் அந்நாளில் தேவனுடைய இரக்கங்கள் அற்ற வர்களாக காணப்படாதபடி இருக்க எங்கள்மேல் இரக்கமாயிரும்.
29இப்பொழுது நாம் அங்கே காண்கிறோம்... இங்கே அதை நான் ஆவிக்குரிய பிரகாரமாக விளக்கிக் கூறுவேன்; அதை நான் உங்களுக்கு என் கையினால் வரைந்து விளக்கிக் காண்பிப்பேன்; எவ்வாறு இஸ்ரவேலர் நான்கு திசைகளிலும் பாளயமிறங்கி யிருந்தார்கள் என்பதை விளக்க அவர்கள் அவ்வுடன்படிக்கைப் பெட்டியை மத்தியில் அமைத்தார்கள். ஒவ்வொரு திசையிலும் இஸ்ரவேலின் மூன்று மூன்று கோத்திரங்கள் வீதம் நாற்திசை களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள் பாளய மிறங்கியிருந்தனர்.
அவர்களில் ஒருவன் ரூபன் கோத்திரம்; அவன் எப்பொழுதும் தெற்கில் தான் பாளயமிறங்கியிருப்பான். அவன் மனித முகக் கொடியைக் கொண்டவனாயிருந்தான். எப்பிராயீம் மேற்கில் இருந்தான், அவனோடு சேர்த்து அங்கே மூன்று கோத்திரங்கள் காளைமுகக் கொடியோடு பாளயமிறங்கியிருந்தது. வடக்கில் தாண் கோத்திரம், அதற்கு கழுகுச் சின்னம் இருந்தது. இப்பொழுது கவனியுங்கள். உங்களுக்கு அவையெல்லாம் ஞாபகமிருக்கிறதா? நீங்கள் யாவரும் அவற்றை நன்கு நினைவில் வைத்திருக்கிறீர்களா? எவ்வாறு கழுகு, காளை, மனிதன், சிங்கம் ஆகியவைகளை வரைந் திருந்தோம் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
30யூதா கோத்திரம் கிழக்கு வாசலை காவல் புரிந்தது என்பதை நீங்கள் கவனியுங்கள். கிறிஸ்துவே யூதா கோத்திரத்து சிங்க மானவர். அவர் கிழக்கத்திய ஆகாயங்களின் வழியாக கீழே இறங்கி அவ்வாசலுக்குள் பிரவேசிப்பார். அவர் யூதா கோத்திரத் திலிருந்து கிழக்கு வாசலிலிருந்து வருகிறார். அவரே யூதா கோத்திரத்து சிங்கமானவர்.
இன்று காலையில் வருகின்ற செய்தியில் கூட அவர் இன்னமும் ''யூதா கோத்திரத்து சிங்கமும், தாவீதின் வேரும், தாவீதின் ஆரம்பமுமாக இருக்கிறார்'' என்று அறிவிக்கப்படுவதைக் காண்கிறோம். தாவீது நித்தியகாலமாக இராஜாவாயிருந்தான்; கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் ஆயிர வருட அரசாட்சியில் அமருகிறார். அவர்தாமே நித்திய இராஜாவாக இருக்கிறார். ''ஒரு புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை“. அல்லேலூயா! தாவீதுக்கு ஒரு புருஷன் இல்லாமற்போவதில்லை என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.
நீங்கள் கேட்கக்கூடும்: “இன்றைக்கு எங்கே அந்த யூத நியாயாதிபதிகள்?' என்று.
இப்பொழுதும் தாவீதுக்கு அவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற வித்து அல்லது சந்ததி மாம்சத்தின்படி இருக்கிறார். ''தாவீ துக்கு இல்லாமற்போவதில்லை' என்று முன்பு ஒருமுறை வாக் குரைக்கப்பட்டது. கிறிஸ்துவே யூதா கோத்திரத்து சிங்கமாயிருக் கிறார். அந்த கோத்திரத்திலிருந்துதான் தாவீதும் தோன்றினான்.
31அவர்கள் கிருபாசனத்தின் காவல்காரர்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். அவர்கள் கிருபாசனத்தை காவல் புரிந்தார்கள். ஒன்றும் அதண்டையில் நெருங்கமுடியாது. எதுவும் கிருபா சனத்தை அணுகவேண்டுமெனில், சுற்றிப் பாளயமிறங்கியிருக்கும் கோத்திரங்களைத் தாண்டிச் செல்லாமல் அணுகமுடியாது. எவரா வது அங்கே பாளயத்தினுள் பிரவேசித்து அக்கிருபாசனத்தைக் கைப்பற்றவேண்டும் என்று எண்ணினால் அதற்கு முன்பாக அங்கே தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் ஒவ்வொரு இஸ்ர வேலனைக் கொன்று, அவன் மரித்தபின்தான் அவ்வாறு செய்ய இயலும். அவ்வாறுதான் பழைய ஏற்பாட்டு நியமமானது இருந்தது என்று இப்பொழுது நாம் பார்க்கிறோம்.
புதிய ஏற்பாட்டு நியமத்திலும் அதே காரியத்தையே நாம் காண்கிறோம். அதாவது இதிலும் கிருபாசனமானது காவல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இன்னமும் கிருபாசனமானது காவல் செய்யப்பட்டுத்தான் இருக்கிறது. அதற்கு இன்னமும் காவல் செய்கிறவர்கள் உள்ளனர். அக்காவலர் கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் என்றும், அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை காத்துக்கொண்டிருக்கின்ற னர் என்றும் நாம் பார்த்தோம். அது பரிசுத்த ஆவியானவர் அப் போஸ்தலர் மத்தியில் செய்த நடபடிகளாகும்; அதுதானே புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகமாயிருக்கிறது. சுவிசேஷங்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய இந்நான்கு பேர்களும், அது பரிசுத்த ஆவியானவராகிய தேவனாயிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும்படி, இன்று கிருபாசனத்தை காவல் செய்துகொண்டிருக்கின்றனர். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதிய ஒவ்வொரு திரு வசனமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்தை பலமாக ஆதரித்தும், பரிசுத்த ஆவியானவரின் நடபடிகளை ஆதரித்தும் இருந்து கொண்டிருக்கின்றன.
32நாம் அதைத் தாண்டிச் செல்வோமென்றால், அப்பொழுது அது அதுவல்ல. ஆனால் அது உண்மையான செய்தியை ஆதரித்து நிற்கிறது. அப்போஸ்தலர் நடபடிகள் 2:38-ல் “நீங்கள் மனந் திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறியதை ஆதரிப்பதைக் குறித்து நாம் கண்டோமே, அதைப்போலத்தான்.
இன்றைக்கு ஞானஸ்நானம் பெறுவதற்கு, அவர்கள் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்'' நாமத்தினால் என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதரவான வேத வசனம் ஏதும் கிடையாது. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அதை காவல் செய்ய ஏதும் இல்லை. நீங்கள் ”மத்தேயு அவ்வாறு கூறியிருக் கிறான்'' என்று கூறலாம். மத்தேயு, மத்தேயு 28 ஐக் காவல் செய்தான். மத்தேயு 1:18ல் அவன் கூறுகிறான்.
“இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவ ருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கை யில், அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
அவன் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு : தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.“
மத்.1:18-20
எனவே, பரிசுத்த ஆவியானவரும், பிதாவாகிய தேவனும் ஒரே ஆள்தான். அல்லது இயேசுவுக்கு இரு தகப்பன்கள் உண்டு என்று ஆகிவிடுமே. எனவே கவனியுங்கள்.
'அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக...“ ”தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.“
மத். 1:21,22
“இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்..... இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்'' அது என்னவெனில் அவரே தேவன்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே நாமத்தினால் விளங்குகிறார். இது அவ்வாசலை பிழைக்கு எதிராக காவல் செய்கிறது.
33சில நாட்களுக்கு முன்பாக சிக்காகோ நகரில் சிக்காகோ ஊழியக்காரர்கள் சங்கத்தில், மகா சிக்காகோவில் .... நான் அறிவேன்..... அன்று இரவில் பரிசுத்த ஆவியானவர் என்னை எழுப்பி, “ஜன்னலின் அருகே போய் நில்'' என்று பணித்தார். அங்கே என்னிடம் அவர், ”அங்கே ஒரு ஊழியக்காரர்கள் குழு உள்ளது. அவர்கள் உனக்கு காலை சிற்றுண்டிக்காக ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். கவனமாயிரு , அவர்கள் இவ்வுப தேசத்தின் பேரில் உன்மேல் தாக்குதல் தொடுப்பார்கள்'' என்று கூறினார்.
“நன்றி உமக்கு, கர்த்தாவே'' என்று நான் கூறினேன். எங்கு அது நடத்தப்படவுள்ளது என்பதை எனக்கு அவர் காண்பித்தார்.
பிறகு, நான் சென்று, அது எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைப் பற்றி சில ஊழியக்காரர்களிடம் முன்னதாகவே உரைத் தேன். அவர்கள் சகோதரன் கார்ல்சன், சகோதரன் டாமி ஹிக்ஸ் ஆகியோராகும். நான் அவர்களிடம் “நீங்கள் வேண்டுமென கேட் டிருக்கும் அறை உங்களுக்குக் கிடைக்காது. அது வேறு ஒரு அறை யாக இருக்கப்போகிறது. நாம் வேறு ஒரு இடத்தில்தான் கூடப் போகிறோம்” என்று கூறினேன். டாக்டர் மீட் அவர்கள் எவ்வாறு அமர்ந்திருக்கப்போகிறார் என்பதையும், எவ்வாறு ஒரு கறுப்பு நிற மனிதன் உள்ளே வந்து இன்னவிதமாய் உட்காரப்போகிறார் என்பதையும், மற்றும் அங்கு நடக்கப்போகிற எல்லாவற்றையும் குறித்து நான் அவர்களிடம் முன்னதாகவே உரைத்தேன்.
34அன்று காலையில் என் மகன் என்னிடம், “அப்பா, நீங்கள் தர்க்கம் செய்யும் அக்கூட்டத்திற்குப் போகப் போகிறீர்களா?'' என்று கேட்டான்.
நான் அதற்கு மறுமொழியாக, “நான் அங்கே தர்க்கம் செய்யப் போகவில்லை; அங்கே நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடும், கிருபாசனத்தை காவல் செய்யும் திருவசனத்தோடும், அவரும் அங்கே இருக்கிறபடியாலும், போகப்போகிறேன்'' என்றேன்.
எனவே நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் என்னிடம் எந்தவொன்றையும் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் முன்னர், பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அதைக் கூறுவதற்கு இதுவே தக்க தருணம்'' என்று கூறினார்.
“நீங்கள் ஏன் இங்கே கூடி வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இப்பொழுது சகோதரன் ஹிக்ஸ் அவர்களே, கிறிஸ்தவ வியாபாரக் குழுவின் தலைவராகிய சகோதரன் கார்ல்சன் அவர்களே, நேற்றைக்கு முந்தின நாளன்று, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், இங்கு என்ன நடக்கும், எவ்வாறு இருக்கும் என்று கூறியவைகளையெல்லாம் நான் உங்களிடம் கூறினேனே, சரியாக அதேவிதமாக இங்கே யாவும் நடக்கவில்லையா? நீங்கள் பதிவு பண்ணியிருக்கிற அறை உங்களுக்குக் கிடைக்காது, நாம் மற்றொரு அறையாகிய இங்கேதான் கூட முடியும் என்று கூறினேனே, பார்த்தீர்களா?'' என்று நான் கூறினேன். அன்றைக்கு காலையில் அவ்வாறுதான் அவர்களுக்கு கிடைத்தது. நான் மேலும் கூறினேன். ”இன்னின்ன இடத்தில் இன்னார் இன்னவிதமாக அமர்ந்திருப் பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் கூறிய வண்ணமாக சரியாக அவ்வாறே இங்கு ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைக் குறித்து என்னை மடக்கி விடவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இங்கே கூடி வந்திருக்கிறீர்கள்“ என்று கூறினேன்.
35அப்பொழுது நாங்கள்.... பரிசுத்த ஆவியானவர் அந்த திரித்துவ ஊழியக்காரர்கள் மத்தியில், தேவனுடைய வசனத்தை எடுத்து, அதை வெளிப்படுத்தி வியாக்கியானித்துக் கொடுத்தார். அப் பொழுது அவர்கள் மேசைக்கு கீழாக தங்கள் கரங்களை நீட்டி ஒருவரோடொருவர் கைகுலுக்கிக்கொண்டார்கள். அவர்கள் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. அவர்களில் எழுபத்திரண்டு பேர்கள் என்னிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெறுவதற்காக இக்கூடாரத்திற்கு வரவிருக்கிறார்கள் என்பதாக நான் அறிய வருகிறேன்.
கிருபாசனமானது காவல் பண்ணப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதைக் காவல் செய்கிறார். சரியாக அதேவிதமாக நாம் அதைக் காத்திடவேண்டும். அந்த தேவனுடைய வார்த்தை யானது... அந்த மகத்தான செய்தியாளர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நடபடிகளையும் பின்பலமாக ஆதரித்து நிற்கின்றனர்.
இன்று காலைச் செய்தியில் கூட நான் சரியாக அதைத்தான் கூறினேன். அதை நாம் அங்கே சரியாக அப்படியே காத்திடுவோமாக. சுவிசேஷத்தினால் அதைக் காத்திட வேண்டும். பாருங்கள்? சுவிசேஷங்கள் அதை எங்கே காக்கின்றனவோ, அதே இடத்தில் அதைக் காத்திடவேண்டும்.
36இப்பொழுது நாம் அங்கே, அவைகள் பழைய ஏற்பாட்டில் தேவனுடைய கிருபாசனத்தைக் காத்து வந்தன என்று கண்டோம்; இங்கே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர். கிருபா சனமானது காக்கப்படத்தானே, யூதா கோத்திரத்து சிங்கமானவர் தன் ஜீவனையே அதற்கெனக் கொடுத்து, தன் சொந்த இரத்தமானது அதின்மேல் தெளிக்கப்படச் செய்தார். அந்த மகத்தான ஜெயங் கொண்டவரான அவர் இன்றைக்கு அங்கே நின்றுகொண்டிருக் கிறார். அவர் ஒருநாளில் கிழக்கில் இருந்து இறங்கி வந்திடுவார். நாம் அவரைக் காண்போம்.
37ஞானஸ்நான ஆராதனை இருப்பதினால், நாம் விரைவாக முடிக்கலாம். ஏழு முத்திரைகளின் புத்தகமானது என்ன? ஓ அது என்ன மகத்தான காரியமாயிருக்கிறது! அதைப் பற்றி இங்கே அது என்ன கூறுகிறது என்பதை கவனித்தீர்களா? புத்தகத்தின் புறம்பே ஏழு முத்திரைகள் உள்ளதாக அது இருந்தது. அதில் ஏதோ இருக்கிறது, தேவன்தாமே நமக்கு இப்பொழுது உதவி செய்து, நமக்கு தைரியத்தை அளிப்பாராக. சீக்கிரத்திலோ அல்லது தாமதித்தோ, அதைப்பற்றி நான் உங்களுக்கு பிரசங்கிப்பேன். பாருங்கள், இது வார்த்தையில் எழுதப்படவில்லை. வார்த்தையின் பின்னால் அது முத்திரையிடப்பட்டுள்ளது. அப்புத்தகமானது இந்த ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ளது. அப்புஸ்தகத் தின் முழு இரகசியமும் இந்த ஏழு முத்திரைகளுக்குள் முத்திரை யிடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தில் மிக மகத்தான அதிகாரங்களுள் ஒன்றாக இது இருக்கிறது. பாருங்கள்:
“அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரை களால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தை (உள்ளாக - அதைப் பற்றித்தான் இன்று காலையில் நாம் படித்துக் கொண்டிருந்தோம்) (வேதாகமத்திற்கு வெளியே... அதைப்பற்றி வேதாகமமே ஒன்றும் கூறவில்லை. அது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட ... தேவனுடைய இரகசியங்கள் ) சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்தில் கண்டேன்.”
வெளி. 5:1
38அது என்ன? இப்பொழுது கவனியுங்கள். ஒரு முத்திரை என்னப்படுவது செய்து, நிறைவேற்றப்பட்ட, பூர்த்தியாக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது. அது ஏற்கனவே சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு அதன்பிறகு முத்திரையிடப்பட்டுள்ளது. நம் முடைய இரட்சிப்பின் அச்சாரமானது பரிசுத்த ஆவியினாலே நம்மில் இப்பொழுது முத்திரையிடப்பட்டுள்ளது. அதுவே நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாயுள்ளது.
நாம் ஒரு வேதவாக்கியத்தை சற்று நோக்குவோமாக. நான் இங்கே அநேக வேத வாக்கியங்களைக் குறித்து வைத்துள்ளேன். அவற்றுள் ஒன்றை இப்பொழுது நாம் பார்ப்போம். அவை யாவற்றையும் இங்கே நாம் பார்க்க நமக்கு நேரமில்லை. ஆனால் நாம் எபேசியர் நிருபத்திற்கு ஒரு க்ஷணம் திரும்பிச் செல்வோம். எபேசியர் முதலாம் அதிகாரத்தில் இதைப்பற்றி வாசித்து, அதன் உண்மையான அர்த்தத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
''தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது;
எபே.1:1.
39இந்நிருபமானது யோவானால் எபேசுவிலுள்ளவர்களுக்கு என்று முகவரியிட்டு அனுப்பப்பட்டது; அதாவது எபேசுவிலுள்ள கிறிஸ்துவுக்குள்ளாக விசுவாசிகளாயிருக்கிறவர்களுக்கு என்று முகவரியிட்டு எழுதுகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பவுலினால் பிரசங்கிக்கப்பட்டு, சுவிசேஷத்தினால் வளர்க்கப்பட்டு போஷிப்பிக்கப்பட்டு வந்தவர்கள்.
'... கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாயிருக்கிறவர்களுக்கு...'' இவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறவர் கள் ஆவர்.
நாம் எவ்வாறு கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறோம்? “எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம் பண்ணப்பட்டு அதுதான் கிறிஸ்துவின் சரீரமாகும்.
“நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவ னுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங் களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.“
எபே. 1:2,3
40இப்பொழுது அதைப்பற்றி எண்ணிப்பாருங்கள்! கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் ஒன்றாக கூடிவருகையில், விசுவாசி களாக, தெரிந்து கொள்ளப்பட்ட சபையாக, வேறு பிரிக்கப்பட்ட வர்களாக கூடி வருகையில், அவர் நம்மை உன்னதத்தின் எல்லா கிருபையாலும், ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதித்திருக்கிறார். அவர் நம்மை தமது பரிசுத்த ஆவியினாலே முத்திரையிட்டு, எதிர்காலத்தில் நிகழப்போகும் அனைத்து காரியங்களைக் குறித்தும் இப்பொழுது நமக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இப் பொழுது நாம் ஏழு முத்திரைகள் வரைக்கிலும் வந்துவிட்டோம்.
“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்ற மில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத் துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, ...தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.”
எபே. 1:4,6
இது என்னே ஒரு ஆழகான கருத்தாக இருக்கிறது! இன்னும் ஒரு நிமிடம் தொடர்ந்து வாசிப்போம். இங்கே விசேஷமாக 12,13, 14ம் வசனங்களை வாசிக்க நான் விரும்புகிறேன்.
“மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும் படிக்கு....
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். (ஆங்கில வேதாகமத்தில் “நீங்கள் விசுவாசித்தபிறகு'' என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில் ”விசுவாசிகளான போது'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்).
எபே 1:11,13
'நீங்கள் விசுவாசித்தபிறகு. 'ஓ, எனது பாப்டிஸ்ட் சகோதரனே, அது அவ்வாறு இல்லை என்று எவ்வாறு நீ சொல்ல முடியும்? நீங்கள் விசுவாசித்த பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறுகிறீர்களே? வேதம் கூறுகிறது, “நீங்கள் விசுவாசித்தபிறகு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டீர்கள்'' என்று கவனியுங்கள்.
''அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.“
எபே. 1:14
41இப்பொழுது முத்திரை என்பது “ஏற்கனவே தேவனிடத்தில் முடிந்துவிட்ட ஒரு காரியமாக, ஏற்கனவே தீர்க்கப்பட்ட விஷய மாக' இருக்கிறது என்று நாம் கண்டோம். ஆதிமுதற்கொண்டே ஒவ்வொரு விசுவாசியும் இந்த வாக்குத்தத்தத்தோடு முத்திரை யிடப்பட்டிருக்கிறார்கள்! ஏனெனில் உலகத்தோற்றத்திற்கு முன்னரே நாம் புத்திர சுவிகாரமடையும்படி முன்குறிக்கப் பட்டுள்ளோம். உலகம் என்ற ஒன்று உண்டாவதற்கு முன்னரே! உறுதியோடும், நிச்சயத்தோடும் நம்மை இளைப்பாறச் செய்யும் ஒரு நம்பிக்கையாக இது இருக்கிறது; அது நமது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது; அதனால் நாம் அங்கும் இங்கும் அடிபட்டு அலைகிறவர்களாயிராமல் இருக்கச் செய்து, கிறிஸ்துவுக்குள் நம்மை நங்கூரமிட்டுள்ளதாக, நிச்சயமான நம்பிக்கையாக இருக்கிறது! ”இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப் புத்திரராகும்படி உலகத்தோற்றத்திற்கு முன்னரே நம்மை குறித் திருக்கிறார்.“ ஓ, என்னே அற்புதமாக இது இருக்கிறது! தேவனிடத் தில் ”நிறைவேற்றப்பட்ட கிரியையாக '' அது இருக்கிறது என்பதை நான் நேசிக்கிறேன்.
42இப்பொழுது நான் உங்களுக்கு இன்னொரு வேதவாக்கியத்தை இங்கே குறிப்பிடுவேனாக. “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்'' தேவன் ஆதி முதற்கொண்டே தனது மகத்தான முடிவில்லாத சிந்தையில் தனது சபையை முன்கூட்டியே பார்த்து, காலத்தின் முடிவிலே நித்திய ஜீவனை அவர்களுக்கு அளிப்பதற்காக, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் புத்திர சுவிகாரம் அடைவதற்காக சபையை முன் குறித்தார். என்னே ஒரு அழகான காரியமாக இது இருக்கிறது! சகோதரன் நெவில் அவர்களே! நான் மிகவும் பரவசமடைந் துள்ளேன். எனவே... இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக சுவிகாரம் கொடுத்தார்.
43இப்பொழுது நாம் தொடர்ந்து பார்க்கையில், கவனிப்போம். அது முடிவுபெற்ற ஒன்றாக இருக்கிறது என்று நாம் அறிகிறோம். ஆட்டுக்குட்டியானவரோடு நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரே நமது முத்திரையாக இருக்கிறார். அச்சாரம் என்பதற்கு “இன்னும் அதிகம் வரவேண்டியுள்ளது'' என்று அர்த்தமாகும். இப்பொழுது அச்சாரத்தை மட்டும் நாம் பெற்றுள் ளோம். அச்சாரம் என்பது ”ஒன்றைக் கிரயத்திற்குக் கொள்ளுகை யில், கிரயத் தொகையின் ஒரு பாகத்தை மட்டும் ரொக்கமாக முன்பணமாக செலுத்துவதாகும்“. ஆகவே இந்த முன்பணமானது, கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட பொருளை கிரயம் வாங்குபவருக்கு உடமையாக்கிக்கொடுத்து, (ஓ இது எவ்வளவு அழகாக இருக்கிறது!) அதைப் பாதுகாத்து, யாரும் தொடமுடியாதபடி நங்கூர மிட்டுத் தருகிறது. அது நமது சுவீகாரத்தின் அச்சாரமாயிருக்கிறது. ஆமென், பரிசுத்த ஆவி இப்பொழுது நமது இருதயங்களில் முத்திரையிடப்பட்ட தேவனுடைய அச்சாரமா யிருக்கிறது; நமது பயணத்தின் முடிவில் புத்திர சுவிசாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அது நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஆவதற்காக.
44நாம் விரைவாக இன்னொரு வேத வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். நான் பிறிதொரு பக்கத்தில் அதை குறித்து வைத் துள்ளேன். ரோமர் 8:22, அது அழகாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இதைக்குறித்து நான் நேற்று ஆராய்ந்து கொண்டிருக் கையில், சில வேத வாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன்; அவற்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
''ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வசிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப் படுகிறது.
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப்பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர் மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.“
ரோமர் 8:22,23
ஓ, நீங்கள் அதை கவனித்தீர்களா? ''சர்வ சிருஷ்டியும் தவிக்கின்றன.'' பவுல் இவ்வாறு கூறினான். யாவும் தவிக்கின்றது. மரங்களைப் பாருங்கள், அவைகள் எவ்வாறு தவிக்கின்றன என்று. மலர்களைப் பாருங்கள்; அவைகள் ஜீவனுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. அவைகளை உறை பனியானது கிழித் தெறிந்துவிடுவதால் அவைகள் ஜீவனுக்காக போராடுகின்றன. மரங்களைப் பாருங்கள். தேவனுக்கு மகிமையாக கீதங்கள் பாடும் அவைகள் தங்களை கிளைகளை பற்றிக்கொள்ள எவ்வளவாய் போராடுகின்றன என்பதைப் பாருங்கள். பார்த்தீர்களா? அனைத்தும் - இயற்கை அனைத்தும் - அனைத்து மிருகங்களும், அனைத்து பறவை களும், ஜீவனுக்காகப் போராடுகின்றன. பறவைகள் தங்கள் எதிரி யிடமிருந்து தப்பித்துக்கொள்ள அவைகள் எவ்வளவு விரைவாக விலகி பறந்தோடுகின்றன என்பதைப் பாருங்கள். எல்லாம் தவிக் கின்றன. 'நாமும்கூட'' என்று பவுல் கூறினான். அவைகளோடு நாமுங்கூட ஏங்கித் தவிக்கிறோம்; ஏனெனில் நாம் நமது சரீர மீட்பைப் பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறோம்.
45ஆனால் இப்பொழுது, அவைகள் கடந்த இத்தனை ஆண்டுகள் முதற்கொண்டு, இதுவரையிலும் இருந்து வந்திருக்கின்றன. நமது சுதந்திரத்தின் அச்சாரத்தை நாம் இப்பொழுது பெற்றவர்களாய் இருக்கிறோம். ஓ, என்னே! நாம் எதை உடையவர்களாயிருக் கிறோம்? தேவன் ஜீவிக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை நாம் உடையவர்களாயிருக்கிறோம். தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை உடையவர்களாயிருக்கிறோம். தேவன் நம்மை கைவிடவில்லை என்பதற்கும், நாம் அவருடை யவர்கள் என்பதற்கும், அவர் நம்முடையவர் என்பதற்கான அத்தாட்சியை உடையவர்களாயிருக்கிறோம். ஏனெனில், “அப்பா, பிதாவே'' என்று கூப்பிடுகிற பரிசுத்த ஆவியானவரை நமது சரீரங்களில் கூடாரமிட்டு கொண்டிருக்கிறோம். அதை எந்த வொன்றும் நம்மிலிருந்து எடுத்துப் போட முடியாது. நாம் கிறிஸ்துவுக்குள்ளாக நங்கூரமிட்டிருக்கிறோம்.
இப்பொழுது மரங்கள் அதை பெற்றிருக்கவில்லை; இயற்கை அதை உடையதாயிருக்கவில்லை, ஆனால் இருந்தபோதிலும், நாமுங்கூட, இன்னமும் அவைகளோடு சேர்ந்து தவித்துக்கொண்டு தானிருக்கிறோம்; ஏனெனில் நாம் இன்னமும் நமது சுவிகாரத்தின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாம் நமது சுவிகாரத்தின் அச்சாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அதினால் நாம் இவ்வுலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, இப்பொழுது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஆகி யிருக்கிறோம். ஆகவே நாம் என்னவிதமான ஜனங்களாக இருக்க வேண்டும்? ஓ , என்னே, நாம் அதைக்குறித்து சிந்திக்கையில்! அதைக்குறித்து எண்ணிப்பாருங்கள்.
நாம் இப்பொழுது அச்சாரத்தை உடையவர்களாயிருக்கிறோம். நமது ஆவி முழு சுவிகாரத்தை அடைவதற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. நாம் பரிசுத்த ஆவியைப் பெறும் பொழுது, அது நமது முழு சுவிகாரத்தின் அல்லது முழு இரட்சிப்பின் அச்சாரமாயுள்ளது. ஓ, இது எத்தனை அழகாயிருக்கிறது. நான் அதை மிகவும் நேசிக்கிறேன்.
46நாம் சுவிகாரத்தின் முழுமையை அடைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது இது நடைபெறும்? முதலாம் உயிர்த்தெழுதலின்போது. அப்பொழுது அற்பமான சிருஷ்டிகளாயிருக்கிற சரீரங்கள் மறுரூபப்பட்டு, அவருடைய மகிமையான சரீரத்திற்கொப்பானதொரு சரீரத்தை நாம் பெறுவோம். அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைக் காண்போம்; நாம் அவரைப் போல் இருப்போம். அவர் தோன்றும் பொழுது அவருடைய சாயலாகவே நாமும் காணப்படுவோம். அவருடைய சரீரத்தைப்போலவே நாம் மகிமையான, மகிமைப்படுத்தப் பட்டதொரு , சரீரத்தை பெற்றுக்கொள்வோம். அப்பொழுது எல்லா சோதனைகளும், வாழ்க்கையின் போராட்டங்கள் யாவும் ஒரு சிறு பனித்துளியைப்போல மறைந்துபோய், இனி ஒருக்காலும் காணப்படாதபடி போய்விடும்.
பூமிக்குரிய இக்கூடாரங்களிலிருந்து கொண்டு நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது இரட்சிப்பின் பரிபூரணம் பூரணமாக வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மண்ணிலான இக்கூடாரங்களில் நாம் ஒன்றைப் பெற்றுள்ளோம்; நாம் அந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அது நம்மிடம் கூறுகிறது. ஆமென். நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? சகோதரன் டோ அவர்களே, அந்த சிறிய அச்சாரம்தான் அதை உடமையாக்கியிருக்கிறது. அதுதான் அந்த அச்சாரம். நாம் முன்பு இவ்வுலகின் காரியங்களை நேசித்தபொழுது, நாம் பாவம் செய்தபொழுது, இவ்வுலகத்திற்கொத்த காரியங்களை நாம் செய்து கொண்டிருந்தபொழுது, தேவனுக்காக நாம் அக்கறைகொள்ளாமல் இருந்தபொழுது, நாம் அவரை விட்டுவிலகி அந்நியராகக் காணப்பட்டு, இவ்வுலகில் தேவனற்று, கிறிஸ்து அற்றவர்களாகக் காணப்பட்டோம். இப்பொழுது தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பி, அதன்மூலமாக நாம் அக்காரியங்களைவிட்டு தூக்கியெடுக்கப்பட்டு உயர்த்தப்பட்டிருக்கிறோம். இப்பொழுது நாம் அந்த அச்சாரத்தை உடையவர்களாய் இருக்கிறோம். அதன் மூலமாக நாம் மரணத்தை விட்டுக் கடந்து ஜீவனுக்குள் பிரவேசித் திருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். ஆமென்.
இங்கே நான் அதைக்குறித்து விளக்கிக் காண்பித்தவிதமாக அது இருக்கிறது. இதோ இங்கேதான் ஒரு சாதாரண பாவியானவன் ஓடிச்சென்று, தாழ்விடத்துக்குப் போய் விழுகிறான். இங்கோ இந்த கிறிஸ்தவன் அதைவிட மேலான நிலைக்குப் போய் அந்த விஷயங்களிலிருந்தும் மேலாக உயர்த்தப்படுகிறான். அதுவே அவனது இரட்சிப்பின் அச்சாரமாயிருக்கிறது.
47தரிசனங்கள் உங்களுக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக. தேவன் எனக்கு நியாயாதிபதியாக இருக் கிறார். எனவே உதவி செய்திடுக. நான் வேறொரு தரிசனத்தைப் பெற விரும்பவில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் அதை என்னோடு வைத்துக்கொள்ளுவேன். ஏனெனில் அது என்ன செய்கிறது என்பதை நான் காண்கிறேன். மக்கள் அந்தவிதமான ஊழியத்திற்கு ஆயத்தமாயிருக்கவில்லை. எனவே நான் அதை அப்படியே விட்டுவிட்டு, திரும்பி இங்கு வந்துவிடவேண்டும். நான் மீண்டும் ஊழியக் களத்திற்கு எப்பொழுதாவது திரும்பி வருவேனென்றால், நான் ஒரு சுவிசேஷகனாகவே இருப்பேன். ஆனால் இங்கே பாருங்கள். இங்கே இந்த இடத்தில், இங்கே திரும்பி வருதலில், இங்கே மேலே வருகையில், நீங்கள் இங்கே பரம வாசஸ்தலங்களுக்குப் போகிறீர்கள். நீங்கள் அங்கே உன்னதமான ஸ்தலங்களில் வாசம் பண்ணுகிறீர்கள். மனிதனின் சிந்தையில்கூட தோன்றக்கூடாத, அந்தவிதமான காரியங்களுக்கும் அப்பாற்பட்டதான எந்த ஒன்றுக்கும் மேம்பட்டு நீங்கள் போய் விடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் அங்கே அந்த ஸ்தலங்களில் போய்விடுகிறீர்கள்.
48ஆனால் நீங்கள் பாருங்கள். நாம் பரிசுத்த ஆவியினாலே, நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரத்தை உடையவர்களாயிருக் கிறோம். ஏனெனில் நாம்தானே இவ்வுலகத்தின் காரியங்களி லிருந்து உயர்த்தப்பட்டிருக்கிறோம். நாம் உலகத்தோடுதான் சென்றுகொண்டிருகக்கிறோம்; ஆனால் நாம் உலகத்திலும் உயர்ந்து காணப்படுகிறோம். ஓ, சகோதரன் நெவில் அவர்களே, தேவன் இரக்கமாயிருந்து ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு அருளுவாராக.
ஒரு சபையைக் குறித்து, ஒரு அழகான சபையைக் குறித்து நாம் எண்ணப்போகையில், நாம் அதை உலகின் காரியங்களோடு ஒப்பிட்டுவிடுகிறோம். ''நமக்கு அவர்களுக்கு இருப்பதைவிட சிறந்த கட்டிடம் இருக்க வேண்டும். நமக்கு மற்றவர்களுடையதை விட சிறப்பான சீட்டாட்டம் இருக்கவேண்டும், நமக்கு சிறந்த இன்னது வேண்டும். இன்னது வேண்டும்'' என்றெல்லாம் கூறுகிறீர்கள். ஏன் இப்படி? எங்ஙனம் நீங்கள் அதை உலகின் கவர்ச்சியோடும் பகட்டு மினுமினுப்போடும் ஒப்பிட்டுப் பேசமுடியும்? நாம் அவ்வாறு இல்லை. சுவிசேஷமானது பகட்டு மினுமினுப்பு (glisten) உள்ளதல்ல. அது செந்தழலாகப் பிரகாசிக்கும் ஒன்றாகும் (glow). பகட்டொளிக்கும், செந்தழலாகப் பிரகாசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கவனித்தீர்களா?
49நாம் சுற்றிக்கொண்டே போகிறோம்; நான் ஏற்கனவே கூறிய வண்ணமாக ஒரு பிணத்தை ஒரு சவக்கிடங்கிலிருந்து இன்னொரு சவக்கிடங்கிற்கு மாற்றுவது போல்; ஒரு சபையை விட்டு இன் னொரு சபைக்கு உறுப்பினராவது, அப்படி மாற்றிக்கொண்டே போவதாகிய அவ்விதமான காரியத்தை செய்கிறோம். அவ்வாறு செய்வதினால் நமக்கு என்ன பயன்? நாம் அதை பகட்டாக ஆக்கிட முயற்சிக்கிறோம். கட்டிடங்களுக்கு ஊசி போன்ற கோபுரங்களை உண்டாக்கிக்கொண்டு, பெரிய அருமையான கட்டிடங்களை அமைத்துக் கொள்கிறோம். மெதோடிஸ்ட்டுகளுடையதைவிட மேலான ஒன்று வேண்டும். நாம் கத்தோலிக்கரோடு இந்த விஷ யத்தில்தான் போட்டிபோட்டுக்கொண்டு இருந்து கொண்டிருக் கிறோம். நம்முடைய சபைகளில் சீட்டாட்டங்கள் உள்ளன; பார்ட்டிகள் நடத்துகிறோம், இரவு விருந்துகள், களியாட்டங்கள், இன்ன பிறவும் நமக்கு சபைகளில் ஏராளம் உள்ளன.
50இந்த சபையானது ஒருபோதும் உலகோடு ஒப்பிட முடியாது. நீங்கள் உங்கள் சபையின் செயல்பாட்டை மேசோனிக் லாட்ஜோடு எப்படி ஒப்பிடமுடியும்? (ஃப்ரீமேசன் என்னப்படும் ஒரு சர்வதேச இரகசிய ஸ்தாபனத்தின் சபை கூடுமிடமே மேசோனிக் லாட்ஜ் என்னப்படுவதாகும். இந்த ஸ்தாபனம் பிசாசையே நேரடியாக தொழுகை செய்பவர்கள் ஆவர் - மொழிபெயர்ப்பாளர்). அது அவர்களுடைய நிலைக்களம். அவர்களுடைய நிலையில் போய் நீங்கள் நிற்க முயலவேண்டாம்.
அவர்கள் பெற்றிராத ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். நாம் இயேசுவை உடையவர்களாயிருக்கிறோம். அவர்களுக்கு அந்த ஒன்று வேண்டுமெனில் அவர்கள் இங்கே வரட்டும். கிறிஸ்துவில் நிலைத்திருங்கள். நாம் இயேசுவை உடையவர்களாயிருக்கிறோம். அவர்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இங்கே வராதவரையிலும் அவர்களால் இயேசுவைப் பெற்றுக்கொள்ள முடியாது. நாம் அங்கே போவோமென்றால், நாம் அவருடைய பிரதேசத்தை விட்டு நீங்கினவர்களாக இருப்போம்.
ஆகவே பகட்டாக பளபளப்பாக மினுங்க வேண்டாம். கொழுந்துவிட்டு பிரகாசியுங்கள். நீங்களாகவே கொழுந்து விட்டு பிரகாசிக்க முடியாது. அது உங்கள் மூலமாக கொழுந்து விட்டு எரிந்து பிரகாசிக்க நீங்கள் அதை அனுமதிக்க வேண்டும்.
சிறிய மினுக்கட்டான் பூச்சி, தான் பிரகாசிக்க விரும்புவதினால் அது பிரகாசம் விடுகிறதில்லை; அது பிரகாசிக்கிறபடியினாலே, அதிலே பிரகாசம் உண்டாகும்படி ஏதோ ஒன்றுள்ளது. அது அதனிடத்திலேயே இருக்கிறது. அதுவே அதைச் செய்கிறது. அதனுள் ஏதோ ஒன்று இருந்துகொண்டு அவ்வாறு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
51நல்லது, பரிசுத்த ஆவியைப் பொருத்தமட்டிலும் காரியம் அவ்வாறுதான் உள்ளது. நாம் வினோதமாக நடக்கவேண்டும் என்று நடக்க வேண்டியதில்லை; வித்தியாசமானவர்களாக இருக்க வேண்டுமே என்பதற்காக அப்படி இருக்கவேண்டியதில்லை. அதற்கு மிஞ்சி இருக்கவேண்டியதில்லை; நீங்களாக எதையும் செய்ய முயற்சி செய்து இறுக்கமாக இராமல், உங்களுடைய சொந்த கிரியைகளை நீங்கள் செய்யாமல், தேவபக்தியுள்ள ஜீவியத்தைச் செய்து, உங்கள் மூலமாக தேவன் ஜீவிக்க அனுமதி யுங்கள். அதுதானே சுவிசேஷத்திற்காக கொழுந்துவிட்டுப் பிரகா சித்திடும். அது பகட்டாக மேனாமினுக்கியாக இருக்காது. மேனா மினுக்கியாக இருந்தால், அதைக்கண்டு குரங்குகள் தான் குதிக்கும். வெற்றுப் பகட்டாக மினுங்குபவைகளைக் கண்டு அவைகள் எப்பொழுதும் குதிக்கும். ஆனால் உண்மையான ஒளிப் பிரகாசமோ, பரிசுத்த ஆவியின் மென்மையானதான தூய மென்னிறைவுடைய ஒளியின் இனிமையானதாகவும் இருக்கும்.
இப்பொழுது நாம் அந்த உயிர்த்தெழுதலுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். நல்லது, இப்பொழுது நீங்கள் அதைப்புரிந்து கொண்டீர்களா? ''அச்சாரம்'' என்பதற்கு அர்த்தமாக நான் கூறுபவைகளை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்களென்றால் ''ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று கூறுகிறார்கள். - ஆசி). மீட்பு..... நாம் மரணத்தைவிட்டு ஜீவனுக் குட்பட்டிருக்கிறோம் என்று அறிகிறோம். ஏனெனில் நாம் உயர்த்தப்பட்டிருக்கிறோம். நாம் நமக்குள் உயர்த்தப்படவில்லை; ஆனால் லௌகீக காரியங்களைவிட்டு உயர்த்தப்பட்டிருக்கிறோம். எனவே நாம் யாவரையும் நேசிக்கிறோம். தேவன் நம்மை நேசிக்கிறார், அதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் நமது ஜீவியங்களை கண்காணித்துப் பார்த்து, அது பரிசுத்த ஆவியா யிருக்கிறது என்பதைக் காண்கிறோம். ஏனெனில், நாம் இனிமேல் இவ்வுலகத்தின் காரியங்களுக்காக கவலைப்படுகிறதில்லை. நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்கள். நீங்கள் இவ்வுலகையும் இவ்வுலகத்தின் காரியங்களையும் நேசிக்கிற வரையிலும் தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இன்னமும் இருக்கவில்லை. கவனித்தீர்களா? ஆனால் நீங்கள் அதற்கு மேலாக உயர்ந்து இருக்கும் பொழுது, அப்பொழுது நீங்கள் உங்களுடைய சுதந்திரத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறீர் கள். அப்பொழுது நீங்கள் உங்களுடைய பூரண மீட்பை நோக்கிச் செல்லும் பாதையில் சரியாக இருந்துகொண்டிருக்கிறீர்கள்.
52நாம் முதலாவதாக இயேசுவைக் காணவேண்டும், அது வரைக்கிலும் அது வராது என்பதைப் பாருங்கள். அவர் வரும் பொழுது நாம் அவருடைய சரீரத்தைப் போன்றதொரு சரீரத்தைப் பெற்றுக்கொள்வோம். நாம் அவரைப்போல் ஆகிவிடுவோம்.
நாம் இங்கே ஒன்றை இழந்துவிட்டோம், ஏனெனில் வேதமும் அவ்வாறுதான் கூறுகிறது; இங்கேயுள்ள இப்புத்தகத்தில் .... அது நம்மை மீட்டிருக்கிறது .. எதிலிருந்து நாம் மீட்கப்பட்டுள்ளோம்? நாம் எதையோ ஒன்றை இழந்துவிட்டிருக்க வேண்டும். நீங்கள் மீட்கப்படுவதற்கு முன்னால், நம்மை மீண்டும் மீட்டுக்கொண்ட ஏதோ ஒன்று இருக்க வேண்டும். நாம் பெற்றிருந்த எல்லா சுதந்திரமும் மீண்டும் மீட்டுத் தரப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் நாம் ஏதோ ஒன்றைப் பெற்றிருந்திருக்கவேண்டும். இப்பொழுது நாம் அதை உடையவர்களாயிருக்கவில்லை. ஆனால் இந்த ஆட்டுக்குட்டியானவர் மீட்பதற்காக வந்தார். பார்த்தீர்களா? ஏதோ ஒன்று நாம் பெற்றிருந்தோம். அதை இழந்துவிட்டோம்.
53இப்பொழுது கவனியுங்கள். நாம் எதை இழந்தோம்? ஆதாம் நித்திய ஜீவனை உடையவனாயிருப்பதற்கு அவனுக்கு அருளப் பட்டது. அவன் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கிறபொழுது அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. ஆதாம் பூமியைச் சுதந்திரித்துக் கொண்டான் என்பதை மீண்டும் நாம் இங்கே பார்க்கிறோம். அவன் இப்பூமியின்மேல் ஒரு குட்டி தேவனைப்போல் (amateur god) இருந்தான். இப்பூமியானது அவனுடையதாயிருந்தது. யாவும் அவனுடைய கரத்தில் அளிக்கப்பட்டிருந்தது. அவன் அதனிடத்தில் செய்ய விரும்பிய எதையும் அவன் செய்து கொள்ளலாம். அவன் பூமியிலுள்ளவைகளுக்கு பெயரிட்டு அழைத்தான். செய்ய விரும்பிய எதையும் செய்தான். அவன் உண்மையிலேயே ஒரு தேவபுத்திரனாக இருந்தான்.
இப்பொழுது, ஆதாம் வீழ்ச்சியடைந்தபோது, அவன் தனது உடைமையுரிமைப் பத்திரத்தின் உரிமை இழக்கப்பெற்றான். அதை அவன் சாத்தானிடத்தில் பறி கொடுத்தான். சாத்தான் அந்த உடைமையுரிமைப் பத்திரத்தை எடுத்துக்கொண்டான். ஆதாம் மிகவும் அசதியுள்ளவனாயிருந்தான். அவன் தனது உரிமையை மீட்டுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவன் தனது உரிமையை மீட்டுக்கொள்ள இயலாதவனாயிருந்தான். ஆனால் சாத்தானானவன், உரிய நியதியின்படி, அதின்மேல் உரிமையுடையவனாக இராமல், அதை கைப்பற்றிக் கொண்டவனாக இருக்கிறான். அவன்தானே இப்பூமியின் தேவனாக இருக்கிறான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சாத்தான் அதை எடுத்துக்கொண்டவனாக, தன் கைகளில் பற்றிக்கொண்டவனாக இருக்கிறான். மரணம் அவன் கரத்தில் இருக்கிறது; இப்பூமியானது அவனது கரத்தில் உள்ளது. உலகம் அவனுக்குச் சொந்தமாயிருக்கிறது. ஒவ்வொரு தேசமும் அவனுக்கு சொந்தமாக இருக்கிறது. அவன் அதை ஆளுகிறான். அவன் முழு உலகையும் அதிலுள்ள ஒவ்வொன்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான். சாத்தான் அவ்வாறு செய்திருக்கிறான்.
54ஆனால் தேவனுக்கு நன்றி; நாமோ இவ்வுலகுக்கு சொந்தமான வர்கள் அல்ல. பார்த்தீர்களா? நாம்.... நான் சபையைச் சொல்ல வில்லை. அவன் சபையை தன் ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வில்லை. அவன் உலகை மாத்திரமே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். அவர்கள் அவனுடையவர்கள் என்றும், அவன் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இயேசு அவன் அவ்வாறு இருந்தான் என்றும், அவன் அவ்வாறு இருக்கிறான் என்றும் கூறியிருக்கிறார். அவன் இந்தப் பூமியின் தேவன் என்றும், அவனே ஜனங்களின் கண்களைக் குருடாக்கினான் என்றும் கூறியிருக்கிறார். அவரோ பரலோகத்தின் தேவனானவர். அவன்தானே பூமியை உரிய பிரகாரம் தனதுடைமை யாக்கிக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய உடைமையாக அது இல்லை. ஆனால் ஆதாம் அதைப் பறிகொடுத்துவிட்டான்.
ஆதாம் அதனுடைய, இதற்குரிய நித்திய ஜீவனுக்குரிய அனைத்து உரிமைகள், பூமியை சுதந்தரித்துக் கொள்வதற்கு உரிய உடைமையுரிமை சாசனத்தை, அதன் பேரில் உள்ள உரிமையை இழந்துவிட்டான், பறிகொடுத்துவிட்டான். இயேசு மத்தேயு சுவிசேஷம் 5ம் அதிகாரத்தில், 'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிய வான்கள், அவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்'' என்று கூறினார். பார்த்தீர்களா? இப்பொழுது நாம் அதை உடைய வர்களாயிருக்கவில்லை.
அவ்வுரிமை ஆதாமுக்கோ , அல்லது அவனது சந்ததியில் எவருக்குமோ இருக்கவில்லை. ஆதாமின் சந்ததியினருங்கூட எல்லாவற்றையும் முழுவதுமாக இழந்துவிட்டனர். அது ஆதாமின் சந்ததியினருக்கு இல்லை. நாம் எவ்வளவுதான் இவ்வுலகை அழகுபடுத்த முயன்று, எவ்வளவு பெரிய அழகான வீடுகளையும் இன்னபிறவற்றையும் கட்டினாலும், பூமியானது இன்னமும் ஆதாமின் சந்ததிக்கு கிட்டவில்லை. இல்லை, ஐயா, ஏனெனில் சாத்தான் இப்பூமியை முழுவதுமாக தன் வசப்படுத்திக்கொண்டு விட்டான். அப்படித்தான் நடந்தது. ஏனெனில் ஆதாம் அதை பறி கொடுத்துவிட்டான்.
55ஓ, என்னே ! இன்னும் அநேக காரியங்களைக் கூறலாம். இப்பொழுது அதற்காக நான் உங்களுடைய அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இதற்குப்பிறகு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டியுள்ளது.
அவன் தன் வசப்படுத்திக்கொண்டுள்ளான்; ஆனால் உரிய பிரகாரமாக அவன் அதை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கவில்லை. சட்டப்படியான உரிமைக்காரன் அதை பறிகொடுத்த போது, சாத்தான் அதை தனதாக்கிக்கொண்டுவிட்டான். அதை மீட்டுக்கொள்வதற்கு ஒரேயொரு வழி மாத்திரமே உண்டு. நெருங் கின இனத்தானாகிய அந்த ஒருவர் மூலம் மாத்திரமே அதை செய்ய முடியும். அவர்தான் உரிய பிரகாரமாக அதை மீட்டுத் தரமுடியும். இப்பொழுது, இயேசுகிறிஸ்துவின் கன்னிப் பிறப்பிலே இதை நாம் உடையவர்களாயிருக்கிறோம்.
56இப்பொழுது நான் இங்கே ஒரு காரியத்தைக் கூற விரும்பு கிறேன். நாம் முதலாவதாக வேதத்தின் பின்னால் திருப்பிப் பார்க்க விரும்புவது, பழைய ஏற்பாட்டில், லேவியராகமம் 25:23,24 வசனங்களில் மீட்பின் பிரமாணத்தை நீங்கள் காணலாம். அதை நான் இங்கே குறித்து வைத்துள்ளேன். வசனத்தை குறித்துக் கொள்ளுகிறவர்கள் அதை குறித்துக் கொள்ளுங்கள். எந்த வொன்றையும் ஒரு மனிதன் மீட்டுக்கொள்ள வேண்டும் பொழுது... தேவன் இஸ்ரவேலுக்கு தேசத்தை பங்கிட்டு, யோசுவாவின் மூலம் அதைச் செய்து கொடுத்தபொழுது, ஒவ் வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரதேசம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கே அவர்களது பிள்ளைகள் தங்களுடைய சுதந்தரத்தை சுதந்தரித்துக்கொண்டார்கள்.
இப்பொழுது இந்த மனிதன் ஏழையாகி தனது உடைமை எதையாவதை எந்த ஒருவரிடமாவது இழந்துவிட்டால், அதை அவனது நெருங்கின இனத்தான் ஒருவன்தான் மீட்டுக்கொள்ள முடியும். அது ஒன்றே மீட்டுக்கொள்வதற்குரிய வழியாகும். ஆனால் முடிவில் அது திரும்பி வந்து விட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே அதை அவன் தன் வசத்தில் வைத்திருக்கமுடியும். அது முடிவாக மூல உரிமைக்காரனிடத்தில் தான் திரும்பி வரவேண்டும். அது அதனுடைய மூல உரிமைக் காரனிடத்தில் திரும்பிப் போயாக வேண்டும். அவன் யூதா கோத் திரத்திலிருந்து வந்தவனாயிருந்தால் ..... அவன் அங்கே இருந்தால், அச்சுதந்திரம் அவனது தந்தைக்கு அளிக்கப்பட்டிருந்தால், அவருக்குப் பிறகு அது அவனுடையதாகும், அல்லது ஏதாவது ஒரு நெருங்கின இனத்தான் தான் அதை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் வேறு யாராவது அதை சட்டப் பிரகாரமாக உடைமை யாக்கிக் கொண்டிருக்கமுடியாது. அச்சுதந்திரத்தின் உடைமை யுரிமை சாசனத்தை அவர்கள் தங்கள் வசத்தில் வைத்திருக்கக் கூடும். அந்த பத்திரத்தை அவர்கள் அதன் பேரிலுள்ள கடன் செலுத்தித் தீர்க்கப்படுகிற வரையிலும் தங்கள் வசத்தில் வைத் திருக்கலாம். ஆனால் உரிய மனிதன் வரும்பொழுது, அந்த நபர்...
57உதாரணமாக நான் ஒரு சொத்தை சொந்தமாகக் கொண்டிருக் கிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் அதை இன்னொரு கோத்திரமாகிய யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சகோ. நெவில் அவர் களுக்கு விற்றுவிட்டேன், அல்லது ஒரு அன்னியனுக்கு விற்று விட்டேன் என்று வைத்துக்கொள்வோம். நான் விற்றதின் மூலமாக அவர் அதை உரிய பிரகாரமாக சொந்தங்கொண்டவராக ஆகி விட்டார். அவர் அதில் பிரவேசித்து, அதில் விவசாயம் செய்து, அதன் விளைபொருட்களை எடுத்துக்கொள்ள முடியும். அவர்தான் உரிமைப்பத்திரத்தை உடையவராய் இருக்கிறார். ஆனால் அவர் அதை தனது சொந்தமாகக் கொண்டிருக்கமுடியாது. இஸ்ரவேலில் இவ்வாறு பிரமாணம் இருந்தது. நீங்கள் அதைப்பற்றி லேவிய ராகமம் 25ம் அதிகாரத்தில் வாசித்துப்பாருங்கள்; அப்பொழுது, அவர்கள் அதை சொந்தங்கொண்டாட முடியாது; அந்த சொத்தை வைத்துக்கொள்ள மாத்திரமே முடியும்.
58என் மகன் பில்லி நான் இழந்து விட்ட, விற்றுவிட்ட ஆஸ்தியை திரும்ப விலைக்கு வாங்கிட விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது எனது ஆஸ்தியை விலைக்கு வாங்கியிருந்த அந்த அந்நியரோ அல்லது சகோதரன் நெவில் அவர்களோ அல்லது வேறு யாரோ, யார் அதை, அவ்வாஸ்திக் குரிய உரிமை சாசனத்தை தன் கையில் வைத்திருக்கிறார்களோ..... இப்பொழுது எனது நெருங்கின இனத்தான் எனது இரத்த சம்மந்தமான உறவினனாக இருந்தால், வந்து கேட்டால், அப்பொழுது ஆஸ்தியை விலைக்கு வாங்கினவன் அதற்குமேல் அவன் தன் கையில் வைத்துக்கொள்ள முடியாது. இல்லை, ஐயா. அவன் அதை திரும்ப கொடுத்துவிட வேண்டும். ஆம், ஐயா. அதற்குரிய கிரயமானது செலுத்தப்பட்டுவிட்டதென்றால், அந்த சொத்துக்கு அவன் இருபத்தையாயிரம் டாலர்கள் செலுத்தி விட்டால், அதைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.
நல்லது, அப்பொழுது, சகோதரன் டோனி வந்து, ''சகோ. நெவில் அவர்களே, நான் சகோதரன் பிரன்ஹாம் அவர்களின் ஆஸ்தியை விலைக்கு வாங்கிக்கொள்ளுகிறேன்'' என்று கூறினால், அவர் அதை வாங்க முடியாது.
சகோதரன் நெவில் கூறுவார்: “இல்லை, ஐயா. நான் அதை விற்க விரும்பவில்லை'' ”நல்லது, அதற்கு கிரயமாக என்ன விலை கொடுத்தீர்கள்?''
“இருபத்தையாயிரம் டாலர்கள்''
“நல்லது, நான் உங்களுக்கு முப்பத்தையாயிரம் டாலர்கள் கிரயமாக கொடுக்கிறேன். அல்லது இவ்வளவு தொகை கொடுக் கிறேன்'' என்று அவர் கூறினால்,
“உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் சரி, அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; நான் அதை விற்க விரும்பவில்லை; நான் அதை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுவார்.
ஆனால் பில்லிபால் அங்கே வந்து, என்னுடைய தந்தையின் ஆஸ்தி எனக்கு வேண்டும். இதோ இங்கே இருபத்தையாயிரம் டாலர்கள் உள்ளன'' என்று கேட்டால், அப்பொழுது அவர் அதை விட்டுவிடவேண்டும். அதுதான் சரி; ஏனெனில் அதுதான் அங்கே சட்டமாயிருந்தது.
ஓ, அல்லேலூயா! கிறிஸ்தவர்களாகிய நீங்கள் இதன் அர்த்தத்தைக் கண்டுகொள்ளுகிறீர்கள் என்று நம்புகிறேன். நாம் பூமிக்கு உப்பாயிருக்கிறோம். தேவன் இதை தனது புத்திரருக்கு அளித்தார். அவர் நமக்கு இயற்கை அனைத்தின் மேலும், மிருக ஜீவன் அனைத்தின்மேலும், அதிகார வரம்பை அளித்தார். ஆனால் நமது தந்தையாகிய ஆதாமோ அவ்வுரிமையை சாத்தானிடம் பறிகொடுத்துவிட்டான். ஆனால் அது எங்கே வீழ்ந்துவிட்டது? சரியான உரிமைக்காரனிடத்தில்தான். அதாவது பூமியை உண்டாக் கிய தேவனுடைய கரத்தில்தான். ஆமென்!
59அதை மீட்டுக்கொள்வதற்கு ஒரு மனிதனும் பாத்திரவானாகக் காணவில்லை என்று யோவான் கண்ட பொழுது அவன் “மிகவும் அழுதான்'' என்று யோவான் கூறியது ஆச்சரியமில்லை. அதைச் செய்வதற்கு ஒரு மனிதன் பாத்திரவானாகக் காணப்பட வேண்டும். ”ஒருவனும் அந்தப் புஸ்தகத்தை திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்'' என்று யோவான் கூறினான். அவன், “வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது,'' அல்லது வேறெங்குமுள்ள எந்த ஒருவனாவது என்று கூறுகிறான்.
“ஒரு மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை. அவன் ஒருபோதும் தூதர்களை கனவீனப்படுத்தவில்லை. இப்பூமியானது தூதர்களுக்கு கையளிக்கப்படவில்லை. அது மனிதனுக்குரிய சுதந்தரமாகும். காபிரியேல் நிச்சயமாக பாத்திரவான்தான். வேறு ஒருவனும் பாத்திரவான்தான். மிகாவேல் ஒருவேளை பாத்திர வானாக இருக்கக்கூடும். ஆனால் அங்கே ஒரு மனிதனும் பாத்திர வானாகக் காணப்படவில்லை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? யோவான் மிகவும் சத்தமிட்டு அழுதான்.
யாரோ ஒருவர் கூறினார். ஏனெனில் யோவான் தன்னையே பாத்திரவானாகக் காணவில்லை என்ற காரணத்தால் அழுதான்'' என்று. அந்தவிதமாக அல்ல.
இம்மனிதன் (யோவான் - மொழிபெயர்ப்பாளர்) பரிசுத்தாவி யின் ஆதிக்கத்தின் கீழாக இருந்தான். எனவே அவன் அந்த விதமான தவறு இழைக்கவே முடியாது. ஆனால் அவன் .... அவன் தன்னை மாத்திரமே பாத்திரவானாகக் காணவில்லை என்பதாக அல்ல. யாரையுமே அவன் பாத்திரவானாகக் காணவில்லை.
60எனவே அந்த வேளையில்தானே, ஒரு மூப்பர், அல்லது ஒரு பலமுள்ள தூதன் முன்வந்து, “நீ அழ வேண்டாம். இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்.... ஜெயங் கொண்டிருக்கிறார்'' என்றான். ஆமென். ”ஜெயங் கொண்டிருக் கிறார்''. அதாவது 'அப்புத்தகத்தை எடுக்க பாத்திரவானாயிருக் கிறார்''. ஆமென்.
யோவான் இதுவரைக்கிலும் அவரை அங்கே காணவில்லை. ஏன்? அவர்தானே அங்கே ஒரு ஆசனத்தில், ஒரு சிங்காசனத்தில், தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார். அவர்தானே பரிசுத்த ஸ்தலத்தினுள் இருந்தார். அவரை அது வரையிலும் யோவான் காணவேயில்லை. எனவே யோவான் ஒரு சிங்கம் அங்கே தோன்ற வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் ஒரு ஆட்டுக்குட்டியையே கண்டான்.
61அப்படித்தான் சகோதரர்களே. சாந்தகுணத்தின் மூலமாக இனிமையான குணத்தினால், பரிசுத்த ஆவியினாலே அங்கே நாம் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். ஒரு மகத்தான வல்லமையுள்ள அறிவு படைத்த பெரும்புள்ளியால் இயலாது. ஆனால் தன்னைத்தான் தாழ்த்தக்கூடிய ஒரு மனிதனால்தான் ஜெயங்கொள்ள முடியும். கடுமையாக நடத்தப்பட்டும், இன்னும் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருக்கக்கூடியவனே ஜெயங் கொள்ளுகிறவனாயிருப்பான்.
“புஸ்தகத்தைத் திறக்கவும், அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்.'' என்று அவன் கூறினான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இன்று அல்ல, நாம் அந்த ஏழு முத்திரைகளில் என்ன அடங்கியிருக்கிறது, அவைகள் என்ன செய்தன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
62நாம் இப்பொழுது ''மீட்பு'' என்பதைப் பற்றி சிறிது பார்ப்போம். இந்த நபர் மீட்பை செய்வதற்கு முன்பாக முதலாவதாக அதற்கென பாத்திரவானாகக் காணப்படவேண்டும். சரியான நபராக அவர் இருந்தாக வேண்டும். எனவே, இந்த காரியமானது இயேசு கிறிஸ்துவானவர், கன்னிப்பிறப்பினால் பிறந்ததின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் அவர் தேவனாயிருந்தார். மனிதனாக வந்த அவர் தேவனேயாவார். அவர் மாம்சத்தில் தோன்றிய தேவனாவார். அவர் பாத்திரராயிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பாவமில்லாத பரிசுத்தமான இரத்தமே அவரை பாத்திரராக ஆக்கியது. நாம் அதை இப்பொழுது காண்கிறோம்; அதைப்பற்றி வேத வாக்கியத்தின் மூலமாக காண விரும்பினீர்களானால், 1 பேதுரு 1:18 முதல் 20 முடிய உள்ள வசனங்களில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேதவாக்கியங் களை குறித்துக்கொள்ளலாம். அவர் பாத்திரராக இருந்தாக வேண்டும். அவர் அவ்வாறே இருந்தார். ஏனெனில் அவர் தாமே மனித ரூபத்தை தன்னில் எடுத்துக்கொண்டார். அவர் மனிதனாக ஆனார். தேவன்தாமே நமக்கு நெருங்கின இனத்தானாக ஆனார். யேகோவா தேவனானவர் மாம்சமாகி, நம் மத்தியிலே பாத்திர வானாக வாசம் பண்ணினார் என்கிற அந்த அழகான பாகத்தை அங்கே வேதத்தில் நாம் காண்கிறோம். ஆமென்.
'அவர் ஜெயங்கொண்டிருக்கிறார்''. தேவன் மாம்ச சரீரத்தை எடுத்துக்கொண்டார். அவர் பூமிக்கு வந்தார். ஒரு சிறிய குழந்தையாக பிறந்து வளர்ந்து நம் மத்தியில் நடந்து திரிந்தார். அவர் தமது பரிசுத்த இரத்தத்தின் மூலமாக ஜெயங்கொண்டார்.
63பழைய ஏற்பாட்டில் ஒரு மனிதன் தனக்கு சொந்தமானதைப் பற்றி எவ்வாறு அறிவிக்க வேண்டும், அதற்காக அவன் என்ன செய்தான்? ஒரு மூப்பரை அழைத்து, பத்து மூப்பர்களை.... ஊர் வாசலுக்குப் போய், தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தான் இழந்து போனதை மீட்கப் போவதாகவும், தான் யார் என்பதைப் பற்றியும் எடுத்துக்காண்பித்து, அவன் ஒரு சாட்சியை அதற்காக முன்வைக்க வேண்டும். இங்கே அதைப்பற்றின அழகானதொரு சரித்திரத்தை நான் குறித்து வைத்துள்ளேன்; அதைப்பற்றி நான் ஒரு குறிப்பு வைத்துள்ளேன்; நான் அதைப்பற்றி இன்று காலையில் சிந்திக்கையில் பரவசமடைந்தேன். எனவே அதைப்பற்றி குறிப்பிட மறக்கமாட்டேன். சமீபத்தில்தான் நாம் அதைப்பற்றி - ரூத்தும் நெருங்கின இனத்தானாகிய போவாசைப் பற்றியும் கவனித்தோம். இந்த இளைப்பாறுதலின் மூன்று கட்டங்களைப் பற்றி நீங்கள் கண்டுணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
64அதேவிதமாக சபையின் இளைப்பாறுதலைப் பற்றிய விஷயமும் இருக்கிறதை நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்பு கிறேன். இப்பொழுது கவனியுங்கள். “இனத்தான் மீட்பர்'' என்ற செய்தியில் (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 6, எண் : 8- ஆசி) நாம் யாவரும் அதைப்பற்றி விரிவாகப் பார்த்தோம். தேவன் மீட்பராகும்படி மாம்சமானார். அவரைத்தான் இங்கே 5ம் அதிகாரத் தில் நாம் காண்கிறோம். (வெளி.5ம் அதிகாரம்). அது இவ்வாறு கூறுகிறது.
வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடா திருந்தது.
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழ வேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரை களையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். (இவரைக் குறித்துதான் நாம் பார்த்துக்கொண்டிருக் கிறோம்)
வெளி.5:3-5
65எவ்வாறு ரூத், எவ்வாறு ... நகோமியும் போவாசும் எவ்வாறு ஒரு பரிபூரண எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் என்பதை கவனியுங்கள். பஞ்சம் ஏற்பட்ட நாட்களில் எவ்வாறு நகோமியான வள் சபையை விட்டு, தேசத்தைவிட்டு விலகிச் சென்று, மோவாபிய தேசத்தினுள் சென்று, அங்கே வாசம் பண்ணவும், அங்கே சஞ்சரிக்கவும் சென்றாள் என்பதை கவனியுங்கள். அவள் தனக்குள்ளதையெல்லாம் இழந்துவிட்டாள். அவள் புறப்பட்டுப் போன பிறகு அவர்கள் மோவாபிய தேசத்தில் இருக்கையில், அவளுடைய கணவன் எலிமெலேக்கு இறந்துவிட்டான். எனவே அவனது சுதந்திரமானது இப்பொழுது வேறு ஒருவனுக்கு போய்விடும். அவர்கள் திரும்பி வந்தபொழுது, அவள் திரும்பி வந்தபொழுது, அவள் தன்னோடு அழகான இளம் மோவாபிய விதவையை அழைத்துக்கொண்டு வந்தாள். போவாஸ் அந்த விதவையைக் கண்டபோது, அவள் மேல் காதல் கொண்டான். அவன்தானே கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருக்கிறான். அவன் அவளை நேசித்தான். எனவே அவன் அவளை தன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டுமெனில், அவன் தன் சகோதரன் எலிமெலேக்கு இழந்தவற்றையெல்லாம் மீட்டுக்கொள்ள வேண்டும்.
66எனவே, அவன் தன்னைவிட நெருங்கின இனத்தானாகிய தன்னுடைய இன்னொரு சகோதரனை அழைத்து, அவன் மீட்டுக் கொள்ளுகிறானா என்று கேட்டான். அவனால் செய்ய இயலாது போய்விட்டது. எனவே அவன் ஒலிமுகவாசலுக்கு தேவனுடைய பிரமாணங்களின் பூரணமான மாதிரியாக இருக்கும்படி போனான். அவன் ஒலிமுக வாசலுக்கு சென்று, அங்கே அவன் பாதரட்சை யைக் கழற்றிப்போட்டு, “இந்த நாளிலே, இக்காரியம் உங்களுக் கெல்லாம் தெரிந்திருக்கட்டும்; நான் நகோமிக்கு இருந்த யாவற்றையும் என் சகோதரனாகிய எலிமெலேக்கு இழந்த யாவையும், நான் அடுத்த நெருங்கின இனத்தானாவேன் என்பதால், என்னைத் தவிர அதை மீட்பதற்கு வேறு யாரும் இல்லாதபடியால், நான் மீட்டுக்கொள்ள வந்திருக்கிறேன். அதை மீட்க என்னைவிட இன்னும் நெருங்கின இனத்தான் வேறு யாரும் இருந்தால், இங்கே அவன் முன்னே வரட்டும், அது தெரியப்படுத்தப்படட்டும்'' என்று கூறினான். அப்பொழுது யாவரும் பேசாமல் வாய் மூடியிருந்தனர். எனவே, அவன் சாட்சியாக தன் பாதரட்சையை கழற்றிப் போட்டுவிட்டான். 'என் சகோதரன் எலிமெலேக்குக்கு இருந்த யாவையும் நான் மீட்டுக்கொண்டேன்'' ஏன், அவன் நெருங்கின இனத்தானாக இருந்தான். அவன் நெருங்கின இனத்தானாகிய மீட்பன். ஓ எத்தனை அழகாக இது இருக்கிறது! அது அத்தனை அற்புதமான வரலாறு ஆகும்.
அப்பொழுது இந்தக் காரியம் எல்லாம் நடக்கின்ற வேளையில் ரூத் இளைப்பாறி, எப்படி இது முடிவு பெறப்போகிறதோ என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாள். எவரும் அதற்கெதிராக ஒரு சாட்சியத்தை வைக்கமுடியாத நிலையில் போவாஸ் திரும்பி வருகிறான். அவன் திரும்பி வந்து அந்த அழகிய மோவாபிய பெண்ணாகிய ரூத்தை விவாகம் செய்துகொண்டு, இந்த சுதந்தரத் தில் வாசம் பண்ணினான். என்னே ஒரு அழகான வரலாறு இது!
67ரூத்தில் மூன்று கட்டங்கள் உள்ளன. ரூத் தீர்மானித்தல்; தனது சொந்ததேசத்திற்கு திரும்பிப் போவதா இல்லையா என்பதைப் பற்றி அவள் தீர்மானம் எடுக்கிறாள். சபையும் அதைப்போலத்தான் இருக்கிறது. ரூத் பணிவிடை செய்தல்; தானியம் பொறுக்கச் செல்லும்போது, அவள் பணிவிடை செய்கிறவளாயிருக்கிறாள்! ரூத் இளைப்பாறுதல்; இப்பொழுது இதற்கெல்லாம் அடுத்ததாக ரூத்திற்கு பலன் அளிக்கப்படுதல் நடைபெறுகிறது. சபைக்கு பலன் அளிக்கப்படுவதைப்போல்.
68நமக்கு நேரம் இல்லாதபடியால் நம்மால் இதற்கு மேல் செல்லமுடியாது. ஏனெனில் நமக்கு ஞானஸ்நான ஆராதனை உள்ளது. இப்பொழுது நேரம் பதினொன்றேகால் ஆகிவிட்டது. கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமையோ அல்லது பிறிதொரு ஞாயிறு ஆராதனையிலோ, இதைக் குறித்து இன்னும் பார்ப்போம். இந்த ஏழு கொம்புகளைப் பற்றியும், ஏழு கண்கள், அந்த ஏழு முத்திரைகள், ஏழு ஊழியங்கள், சபையின் ஏழு தூதர்கள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு.... ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குக் காண்பிக்கும்படி இவைகளைப் பற்றி பாடம் உங்களுக்கு எடுக்கலாம் என்று விரும்புகிறேன்.
இங்கேதானே அனைத்து காரியங்களும் ஒன்றாக இணைகின்றன. ஆம், ஐயா, அவர் பாத்திரராக இருத்தல் வேண்டும். எனவே இயேசு பாத்திரராக இருக்கிறார். அவருடைய வருகையிலே மீட்பின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பூரணமாக நாம் அனுபவிப் போம். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள். மனிதர்களும், ஸ்திரீகளும் மீண்டும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பார்கள். ஆயிர வருட அரசாட்சியின் துவக்கம் ஆரம்பிக்கும். என்னே ஒரு அழகான காரியம் இது!
69பலமுள்ள தூதன் மிகுந்த சப்தமிட்டு “யார் பாத்திரவான், யாரால் இதை செய்ய இயலும்? என்று கூறினான்.
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன், “-நீ அழவேண்டாம். யூதா கோத்திரத்து சிங்கம் பாத்திரராயிருக்கிறார். அவர் ஜெயங் கொண்டிருக்கிறார்'' என்றான்.
அவர் வந்து புத்தகத்தை வாங்கி, புத்தகத்தை திறந்து, அதின் முத்திரைகளை உடைத்தார். அவைகளுக்கு என்ன நேரிட்டது என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. நாம் அந்த ஏழு முத்திரைகளைப் பற்றி, அது வேதம் முழுவதிலும் திறக்கப்படுவதைப் பார்க்கையில், என்ன நேரிடுகிறது என்பதை கவனியுங்கள். நாம் கவனித்துக் கொண்டிருக்கிற இந்த ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட புத்தகத்தில்தான், தேவனுடைய மீட்புக் குரிய அனைத்து ஆசீர்வாதங்களின் இரகசியமும் அடங்கியிருக் கிறது. அவர் ஆட்டுக்குட்டியானவராயிருக்கிறார் என்பதை நினை வில் கொள்ளுங்கள். அவர்தான் அதை மீட்டுக்கொண்டிருக்கிறார். அப்புத்தகத்தில் பின்புறத்தில் முத்திரையிடப்பட்டுள்ளது. உள்ளே எழுதப்படவில்லை. அது வெளிப்பக்கத்தில் முத்திரையிடப் பட்டுள்ளது. உள்ளாக எழுதப்பட்டிருக்கவில்லை. அப்புத்தகத்தை திறக்க வேண்டுமானால், அதற்குக்கூட அவர் ஒருவரால் மாத்திரமே இயலும்; அல்லது அப்புத்தகத்தை வெளிப்படுத்தவோ, அல்லது முத்திரைகளை வெளிப்படுத்தவோ, அவர் ஒருவரால் மாத்திரமே செய்ய முடியும்.
70எனவே, இந்த ஒரு விஷயத்தின் பேரில் அவர்கள் குழப்ப மடைந்து, அவர்கள் சச்சரவு செய்திடும்படி செய்யும்; அது என்ன என்பதைப் பற்றி அவர்கள் சச்சரவு செய்யக்கூடும். ஆனால் அவர் மாத்திரமே தெய்வீக வியாக்கியானத்தை அதற்கு அளிக்கமுடியும். ஆனால் அதின் பின்பக்கத்தில் உள்ளவற்றைப் பற்றி ஒருவராலும் ஒன்றும் கூறமுடியாது. அவரால் மட்டுமே அவர் ஒருவரால் மட்டுமே, அதைச் செய்ய முடியும். இந்த ஏழு இரகசியங்களையும் வெளிப்படுத்திட அவர் ஒருவரால் மாத்திரமே முடியும். இங்கே கவனியுங்கள், இங்கே ஒவ்வொரு விஷயமும் மீட்பினைப் பற்றியே உள்ளதாகும். எப்படி சபையானது மீட்கப்பட்டது, யாரெல்லாம் மீட்டுக்கொள்ளப்படுவார்கள் என்பதைப் பற்றியதாகும்.
ஓ, நாம் அவரை முழு இருதயத்தோடும் நேசிப்போமாக, நம்மால் இயன்றவரை யாவையும் செய்வோம்.
71சகோதரன் நெவில் அவர்களிடம் இந்த ஆராதனையை நான் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்னதாக .... ஒரு குறிப்பிட்ட எழுத் தாளர் ஒரு கதையை எழுதிக்கொண்டிருந்தார். வெளிப்படுத்துதலை நீங்கள் அனுபவித்து இரசித்தீர்களா? நான் அதை நேசிக்கிறேன். இதில் மூன்று வசனங்களை இன்று காலையில் எடுத்துக் கொண்டோம். ஆனால் நாம் அதை மீண்டும் எடுத்துக்கொள்ளு வோம்.
தேவனைக் கண்டு கொள்ள முயன்றுகொண்டிருந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றிய கதையை ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண் டிருந்தார்.
அநேக வேளைகளில் நாம் தேவனை தேடுகிறோம். அவருக்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம், தேவன் எங்கும் நிறைந்து இருப்பவ ராக இருப்பின், உங்களுக்கு அதற்காக ஒரு பெரிய .... நல்லது, அவருக்கு ஒரு பெரிய சிங்காசனம் இருக்குமென்றால், அதிலே அவர் எங்கோ ஓரிடத்திலே அமர்ந்து கொண்டிருப்பாராகில், ஒவ்வொருவரும் அப்பொழுது தேவனில் விசுவாசங்கொள்ளு வார்கள். இங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிங்காசனத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பாராகில், ''அவர் இங்கேதான் இருக் கிறார். இதுதான் தேவன், நீங்கள் அவரிடத்தில் செல்லுங்கள், அவரால் இதை இப்படி மாற்றமுடியும்'' என்று சொன்னால் (சகோ. பிரன்ஹாம் தனது விரல்களை சுண்டுகிறார் - ஆசி) அப்பொழுது அவரை விசுவாசிப்பார்கள். அப்பொழுது விசுவாசம் வீணாகிப் போய்விடும். அப்பொழுது விசுவாசமே நமக்குத் தேவைப்படாது. அவ்விதமான நிலைதான் ஏற்படும். ஆயிர வருட அரசாட்சியில்தான் அப்படியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அவர் அழைத்துக் கொண்டிருக்கிறார்; இரகசியமாகவும் இருளா கவும் அது காணப் படுகிறது. அதை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் அறியா திருக்கிறீர்கள். ஆனால் விசுவாசத்தினால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அக்காரணத்தினால்தான் அவர் அதைச் செய்தார். ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொண்டீர்களா?
72இப்பொழுது தேவன் இங்கே ஒரு சிங்காசனத்தில் வீற்றிருப்பாரெனில்....... “ஏன்? இங்கே.... அதோ அங்கே தேவன் வீற்றிருக்கிறார். குறிப்பிட்ட இன்ன ஸ்தலத்தில் அவர் வாசம் பண்ணுகிறார். நாம் அங்கே போகலாம்'' என்று கூறப்பட்டால்.... அப்பொழுது ”அன்புள்ள ஐயா, தேவனே, நீங்கள் அதை செய்வீர்களா?'' என்று அவரிடம் கேட்டால்.
“ஆம், நான் அதைச் செய்வேன்'' (சகோ. பிரன்ஹாம் முழக்கமிட்டுக் கூறுகிறார் - ஆசி). அவர் அப்படிச் சொன்னவுடன் அப்படியே நடக்கும். நல்லது, அது தேவனல்லவா, ஆகவே அப்படித்தான் நடக்கும். நாம் அதைக் காணமுடியும். அப்படி யெல்லாம் இருந்துவிட்டால், விசுவாசம் என்பது தேவையே யிருக்காது. விசுவாசமானது வீணானதாக ஆகிவிடும். காரியம் நடக்கும் என்பதைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் இல்லா மல் நிச்சயமான நிலை நிலவும்போது விசுவாசம் தேவைப்படாது.
73இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நபரும் கிறிஸ்தவராக இருந்துவிட்டால் எப்படியிருக்கும்? உலகில் உள்ள ஒவ்வொரு வரும் ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்தவராக இருந்துவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியெல்லாம் ஆகிவிட்டால், விசுவாசம் என்பதே இனிமேல் தேவைப்படாது. நாம் இரட்சிக்கப்பட்டதே விசுவாசத்தினால்தான். நாம் விசுவாசத்தை செயல்படுத்தத்தக்க தாக, யாராவது அதனுடன் இணங்காமல் இருக்க வேண்டும். இப்பொழுது அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? மாற்றுக் கருத்தும் எதிர் நிலையான காரியங்களும் உங்களுக்கு இருக்க வேண்டும். ஒரு நல்ல பெண்மணியை சுட்டிக்காட்டுவதற்கு ஏற்ற தாக, அதற்கு எதிராக கெட்ட பெண்மணி ஒருத்தியும் இருக்க வேண்டும். சத்தியமானது உறுதி செய்யப்பட்டதாக இருக்கும் படியும், அது நல்லதாக பிரகாசிக்கச் செய்யவும், பொய் என்ற ஒன்று இருந்தாக வேண்டும். அனைத்துமே சத்தியமாக இருந்து விட்டால், அப்பொழுது சத்தியமானது மிகவும் சாதாரணமானதாக இருந்துவிடும். ஆனால் ராஜரீகமானதாகவும், உண்மையுள்ளதாக வும் சத்தியம், விசுவாசம் ஆகியவைகள் உள்ளன. அப்படித்தான் உள்ளது.
74எனவே ஆதரவாகவும் எதிராகவும் உள்ள காரியங்கள் இருக்கத்தான் வேண்டும். அவ்விதமாகத்தான் அது இருக்கிறது. நல்ல நாட்களை நினைவுகூர்ந்து அதைக் குறித்து அனுபவித்து மகிழும்படி கெட்ட நாட்கள் இருந்தாகவேண்டும். நல்ல ஆரோக் கியத்தை அனுபவித்து மகிழ, உங்களுக்கு சிறிது சுகவீனம் ஏற்பட் டாக வேண்டும். மலையுச்சியைக் கண்டு மகிழ்வதற்காக உங்களுக்கு பள்ளத்தாக்குகள் இருக்கவேண்டும். ஆகவே இனி வரப்போகும் நாட்களில் ஒன்றில் எல்லாமே மலையுச்சியாகவும், எல்லாமே நல்லாரோக்கியமாகவும், எல்லாமே தெய்வீகமயமாகவும், எல்லாமே மகிழ்ச்சியாகவும் இருக்கும் அப்பொழுது முடிவில் லாத சந்தோஷமாக இருக்கும். ஆனால் அந்தவேளை வரும் வரை யிலும், நமக்கு சாதகமான காரியங்களும், பாதகமான காரியங் களும் இருக்கத்தான் வேண்டும்.
இதை இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டிருப்பீர்களாயின், “ஆமென்' என்று கூறுங்கள். (சபையார் ''ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி).
75இந்தக் குறிப்பிட்ட பெண், தான் செல்லுமிடம் எங்கும், தான் தேவனை கண்டுகொள்ள முயலுவதாக சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் என்னென்ன சபைகள் இருந்தனவோ அவைகளுக்கு ஒவ்வொன்றாக சென்று பார்த்தாள். ஆனால் அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவள் சாலை வழியாக நடந்து செல்லுகையில், அப்பொழுது அங்கே ஒரு முதிர் வயதான மனிதன் தனது முதுகின் மேல் ஒரு பெரிய ஆலயத்தை சுமந்து கொண்டு சென்றதைப் பார்த்தாள். அவன் அவ்வாறு சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்றான். அவள் அவனைப் பார்த்து, “ஓ நல்ல மனிதனே, அது மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நீர் இவ்வளவு பெரிய ஒன்றை உம் முதுகின் மேல் சுமந்து செல்லுகிறீர். அது உம்மை நசுக்கிவிடுமே'' என்றாள்.
அதற்கு அம்மனிதன், “இல்லை, அது என்னை நசுக்கிப்போடாது. சபை கட்டப்பட்டிருக்கிற கன்மலை நானே' என்று கூறினார். அது அவர்தான். நாம் ஜெபம் பண்ணுவோம்.
76ஓ நித்திய கன்மலையே , அக்கன்மலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாக, ஒரு ஆலயத்தின் மேல் பயணம் செய்து கொண்டு போவதற்காக, நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். அவர் அந்தக் கன்மலை என்று கூறினார். அது காகிதமே அன்றி வேறில்லை எனலாம். அதனோடு அந்தக் கன்மலை தீவிரமாக முன்னேறிச் செல்லுகையில், அழகான மணிகள் உள்ளுக்குள்ளிருந்து ஒலிக்க ஆரம்பித்தன. ஓ நித்திய கன்மலையே , உமது இரக்கத்தினுள்ளாக எங்களை மறைத்துக் கொள்ளும். எங்களை இப்பாதையில் சுமந்து சென்று, ஜீவ ஊற்றுக் கள் அண்டையில் கொண்டு போய்விடும்; அதனால் எங்களது இருதயங்கள் முழுவதும் மகிழ்ச்சியினால் நிறைந்து காணப்படும். போகும் பாதையெல்லாம் எங்கள் இதயங்களில் உமக்கு துதிகளை தொனித்துக்கொண்டே போவோம்.
நாங்கள் இன்று காலையில், வார்த்தையில் பரிசுத்த ஆவியின் சந்திப்பு எங்களுக்கு உண்டானதாற்காக, நன்றி செலுத்துகிறோம். அவர் வந்து வார்த்தையை எங்களுக்கு மிகவும் உண்மையுள்ளதாக ஆக்கித் தந்தார். எங்களுடைய தவறுதல்களையெல்லாம், எங்க ளுக்கு மன்னியும்; நாங்கள் செய்த அல்லது பேசிய தவறானவை களையெல்லாம் எங்களுக்கு மன்னியும். அதற்காக எங்களையும் மன்னியும். பிதாவாகிய தேவனே, நாங்கள் சிறந்த கிறிஸ்தவர் களாக இருக்கத்தக்கதாக எங்களுக்கு உதவி செய்யும். தேவனே, உமது இரக்கங்கள் எங்கள் மேல் இருக்கவேண்டும் என்று ஜெபிக்கிறோம்.
கர்த்தாவே, உமக்கு அது சித்தமாயிருக்குமானால், நாங்கள் சீக்கிரத்தில் இங்கே திரும்பி வந்து, இந்த ஏழு முத்திரைகளை எடுத்துக்கொண்டு, இவ்வதிகாரங்களை முடிக்க உதவி செய்யும். அந்த வேளைக்காக நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, அதைப் பார்க்கும்படி நீர் எங்களை அனுமதிக்கும் பொழுது, பிதாவே, இங்கேதானே இந்த எளிய சபையில் அதை நாங்கள் பார்க்கும் பொழுது, தேவனுடைய இம்மகத்தான காரியங்களை நாங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக எங்களுக்கு அதை அருளிச் செய்யும். நாங்கள் பாத்திரரர் என்பதினால் அல்ல, அதற் காக எங்கள் பசியுள்ள இருதயங்கள் விசுவாசித்துக்கொண்டிருக் கின்றனவே. நீர் அதை அருளுவீர் என்று ஜெபிக்கிறோம்.
77தேவனால் அனுப்பப்பட்ட எங்களது உத்தமமான மேய்ப்பன், எங்கள் சகோதரன் நெவில் அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நீர் அவருக்கு உதவி செய்யும், அவரை ஆசீர்வதிக்கவும் வேண்டு கிறோம். அவருக்காகவும், அவரது இனிய எளிய மனைவிக்காகவும், அவரது சிறு குழந்தைகளுக்காகவும் ஜெபிக்கிறோம்.
இச்சபையின் தர்மகர்த்தாக்களுக்காகவும், உதவிக்காரர்களுக் காகவும், இச்சபைக்கு வரும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுக்காக மாத்திரம் நாங்கள் வேண்டிக் கொள்ளாமல், உமது நாமத்தைக் கூப்பிடும் ஒவ்வொருவருக் காகவும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம். இத்தேசத்திற்கு அப்பாலிருந்து இங்கு வந்துள்ள எனது நண்பர்களுக்காகவும் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒரு நொடிப்பொழுது அறிவிப்பில் கூட, அழைப்பிற்கிணங்கி வந்துவிடுகின்றனர். பிதாவே, நான் இதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
இயேசுவானவர் வரவேண்டிய நாளை தீவிரப்படுத்தும். அந்நாளிலே நாங்கள் யாவரும் கூட்டிச் சேர்க்கப்படுவோம்; அந்நாளில் இனிமேல் பகலுமில்லை, இரவுமில்லை; இனிமேல் நேரம் என்று ஒன்று இருக்காது, ஆனால் அது நித்தியத்திற்குள் போய் கலந்துவிடும், அப்பொழுதுதானே அங்கே நாம் யாவரும் என்றென்றும் ஒன்றாக சேர்ந்து இருப்போம். கர்த்தாவே, அதை அளித்தருளும்.
கர்த்தாவே, இங்குள்ளவர்களில் யாராவது உம்மை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளாதிருப்பார்களென்றால், அவர்கள் இந்த ஆட்டுக்குட்டியானவரோடு அறிமுகத்தைப் பெற்றுக்கொள் ளட்டும். அவரே இவ்வேழு முத்திரைகளுக்குள்ள இரகசியப் புத்தகத்தை தன் கையில் வைத்திருக்கிறார். தேவனே, நாங்கள் அவரோடு பரிச்சயம் கொள்ள உதவி செய்யும். அதனால், அவ்வேழு முத்திரைகளும் திறக்கப்படுவதை நாங்கள் காண்கையில், தேவன் எதைப்பற்றி எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் கண்டுகொள்ள முடியுமே. தேவனுடைய மகிமைக்காக இதை அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறோம்.
நமது தலைகள் வணங்கியிருக்கிற நிலையில்:
78இங்கு யாராவது, ''சகோ. பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் ஜெபிக்கையில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நான் ஜெபத்தில் நினைக்கப்பட விரும்புகிறேன்'' என்று கேட்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, உங்களை.... ஆம், தேவன் உங்களுக்கு நல்லவராக இருப் பாராக. ஆம், அங்கே இரண்டு டஜன் கரங்கள் உயர்த்தப் பட்டிருக்கலாம், இன்னும் அதிகமான கரங்கள் உயர்த்தப் பட்டுள்ளன.
ஓ கர்த்தாவே, அவர்களுடைய கரங்களை நீர் காண்கிறீர். அவர்களுடைய வாஞ்சைகளை நீர் அறிவீர். அவர்களுடைய இருதயத்தில் இருப்பதை நீர் அறிவீர். நான் அறியமாட்டேன். உமது இரக்கத்தையும் தயவையும் அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். என்னவாயினும், அவர்களுக்கு உமது மன்னிப்பை அருளும். கர்த்தாவே, அது வியாதியாயிருந்தால், அவர்களது சரீரங்களை குணமாக்கும், அவர்கள் நலம் பெறட்டும், கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது இருந்து கொண்டிருக்கையிலேயே, இப்பொழுது சபையார் மேல் இருக்கையிலே, அதைச் செய்தருளும். நாங்கள் இங்கிருந்து கடந்து செல்லுகையில், “நமது இருதயங்கள் நமக்குள் கொழுந்துவிட்டு எரியவில்லையா?' என்று கூறிக்கொண்டு போகத்தக்கதாக, ஒவ்வொருவரையும் தெய்வீக பிரசன்னத்தினாலே ஆசீர்வதிக்கும்படி பரலோகத்தின் மகத்தான தேவனானவர் அபிஷேகிப்பாராக. அதைத் தாரும், கர்த்தாவே.
79இப்பொழுது நான் பெலவீனமாகவும் என் குரல் கம்மிய தாகவும் இருக்கிறேன். எனது சொந்த பெலத்துக்காகவும் நான் ஜெபிக்கிறேன். எனக்கு நீர் உதவி செய்வீரா? என்னை நீர் பெலப்படுத்துவீரா? கர்த்தாவே, அங்கேயுள்ள அந்தக் காயத்தை ஆற்று வீராக. அங்கேயும் மற்றுமுள்ள ஒவ்வொரு காயத்தின் மேலும், தேவனுடைய பரிசுத்தமான எண்ணெயானது பூசப்பட உதவி செய்தருளும். கர்த்தாவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும். உமது கனம், உமது மகிமைக்காக நாங்கள் ஜீவிக்க விரும்புகிறோம், கர்த்தாவே, அதைத்தாரும். வியாதியஸ்தரையும் பெலவீனப்பட்டவரையும் குணமாக்கும். கர்த்தாவே, உமக்கே நீர் மகிமையை எடுத்துக்கொள்ளும்; ஏனெனில் நாங்கள், இனிமேல் இமம்மாதிரியான கூட்டங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போகும் என்று உணருகிறோம். அவைகளெல்லாம் போய் விடும். அவைகளெல்லாம் கடந்து போனவையாக ஆகிவிடும்.
இப்பொழுதும் பிதாவே, ஆசீர்வதியும், இவையாவும் நாங்கள் ஒருமித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் கேட்கிறோம்.
மேலும் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களையும் நீர் நினைவுகூர வேண்டு மென கேட்கிறோம். அவர்களுக்கு மகத்தான மகிமையான கன முள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் தர வேண்டுகிறோம். பிதாவே, அதைத்தாரும். அவை யாவையும் நாங்கள் இப்பொழுது உம்மிடம் ஒப்புவிக்கிறோம்.
பிதாவே, இவை யாவற்றோடுங்கூட, என்னையும் சமர்ப்பிக்கிறேன். என்னை மறந்துவிடாதேயும், கர்த்தாவே. இப்பொழுது எனக்கு உதவி செய்தருளும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.